Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு நகரில் வீடு உடைத்து 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை திருடிய திருடன் கைது

மட்டு நகரில் வீடு உடைத்து 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை திருடிய திருடன் கைது

57 minutes ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு நகரில் பூட்டியிருந்த வீடு ஒன்றை உடைத்து அங்கிருந்து சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான 8 பவுன் தங்க ஆபரணங்களை திருடிய ஊறணி பகுதியைச் சோந்த 56 வயதுடைய திருடன் ஒருவரை நேற்று சனிக்கிழமை (17) கைது செய்ததுடன் திருடப்பட்ட தங்க ஆபரணங்களை மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி பண்டார தெரிவித்தார்.

மட்டக்களப்பு செபஸ்தியார் வீதியில் உள்ள வீடு ஒன்றின் உரிமையாளர்கள் கடந்த 14 ம் திகதி வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனர். இந்த நிலையில் பூட்டியிருந்த வீட்டின் மதில் மீது ஏறி குதித்து திருடன் வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்த மோதிரம், காப்பு, தோடு சங்கிலி உள்ளிட்ட 8 பவுன் தங்க ஆபரணங்கள் மற்றும் கவரிங் ஆபரணங்களை திருடிச் சென்றுள்ளான்.

இதையடுத்து பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் வை.விஜயராஜா தலைமையில் பொலிஸ் கொஸ்தாப்பர்களான 15468 இகலகம, 64832 ரகுமான், 35574 சாமர, 73553 விக்கினதாஸ், 100404 திஸநாயக்கா ஆகியோர் கொண்டு குழுவினர் வீட்டில் பொருத்தியிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகிய வீடியோ காட்சியை கொண்டு விசாரணையினை மேற்கொண்டனர்.

இதன்போது ஊறணி பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபரை கைது செய்ததுடன் திருடப்பட்ட மோதிரம் ஒன்று, பென்னரன் ஒன்று, தோடு ஒன்றை காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையத்தில் விற்பனை செய்த தங்க ஆபரணங்களையும் மற்றும் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்களை மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

திடீர் மின்தடைக்கான விசாரணை முன்னெடுப்பு
செய்திகள்

திடீர் மின்தடைக்கான விசாரணை முன்னெடுப்பு

October 18, 2026
சுகாதார உதவியாளர்களின் சீருடை விவகாரம்: சுகாதார அமைச்சருக்கு சாணக்கியன் கடிதம்
செய்திகள்

சுகாதார உதவியாளர்களின் சீருடை விவகாரம்: சுகாதார அமைச்சருக்கு சாணக்கியன் கடிதம்

October 18, 2026
காவி உடையை மீண்டும் அணிவதில் பிடிவாதம் காட்டும் ஞானசார தேரர்
செய்திகள்

காவி உடையை மீண்டும் அணிவதில் பிடிவாதம் காட்டும் ஞானசார தேரர்

October 18, 2026
ஜேர்மனி எல்லையில் கைது செய்யப்பட்ட 49 வயதுடைய இலங்கை பிரஜை; இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை
செய்திகள்

ஜேர்மனி எல்லையில் கைது செய்யப்பட்ட 49 வயதுடைய இலங்கை பிரஜை; இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை

October 18, 2026
சட்டத்திற்கு மேலானவர் எவரும் இல்லை; காவி ஆடையும் சட்டத்திற்கு உட்பட்டதே – தம்மரதன தேரர்
செய்திகள்

சட்டத்திற்கு மேலானவர் எவரும் இல்லை; காவி ஆடையும் சட்டத்திற்கு உட்பட்டதே – தம்மரதன தேரர்

October 18, 2026
திரையரங்கு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு
செய்திகள்

திரையரங்கு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு

October 18, 2026
Next Post
சுகாதார உதவியாளர்களின் சீருடை விவகாரம்: சுகாதார அமைச்சருக்கு சாணக்கியன் கடிதம்

சுகாதார உதவியாளர்களின் சீருடை விவகாரம்: சுகாதார அமைச்சருக்கு சாணக்கியன் கடிதம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு