பிரான்ஸ் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, உட்கட்டமைப்புச் சீர்கேடுகள் மற்றும் வாழ்க்கைச் சுமைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்கள் உக்கிரமடைந்து நாடு முழுவதும் வன்முறையாக மாறியதில் 1,200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுமார் 550,000 பேர் பங்கேற்ற இப்போராட்டத்தில், பாரிஸ், லியோன் உள்ளிட்ட நகரங்களில் கடைகள் சூறையாடப்பட்டு, வாகனங்கள் மற்றும் கட்டடங்களுக்குத் தீ வைக்கப்பட்டன. பொலிஸார் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 150 பொலிஸார் காயமடைந்ததுடன், பதிலுக்குக் கண்ணீர்ப்புகைப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது.
மாணவர்களுடன் தொழிற்சங்கத்தினரும் ‘மஞ்சள் அங்கி’ போராட்டக்காரர்களும் இணைந்துள்ள நிலையில், பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தியவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் எச்சரித்துள்ளார்.
















