Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பெயரை பயன்படுத்தி மோசடி

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பெயரை பயன்படுத்தி மோசடி

49 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பெயரை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடிச் செயற்பாடுகளில் பொதுமக்கள் ஏமாந்துவிட வேண்டாம் என அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.

விமானச் சேவையின் பெயரில் இயங்கும் போலியான நடமாடும் செயலிகள் (Mobile Apps) மற்றும் சமூக வலைத்தளக் கணக்குகள் மூலம் இடம்பெறக்கூடிய நிதி மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்பாக, வட்ஸ்அப் (WhatsApp) உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாகப் பகிரப்படும் சந்தேகத்திற்கிடமான விளம்பரங்கள் மற்றும் செய்திகளில் உள்ள இணைப்புகள் (Links) மூலம் கொடுப்பனவுகளைச் செய்வதைத் தவிர்க்குமாறு அந்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொற்கள் (OTP), வங்கி அட்டைப் இலக்கங்கள் (PIN) மற்றும் ஏனைய இரகசியத் தகவல்களை எவருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் அதிகாரபூர்வ கைப்பேசிச் செயலியைப் பதிவிறக்கம் செய்யும்போது, Apple App Store அல்லது Google Play Store போன்ற முறையான தளங்களை மட்டுமே பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

விமானப் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும்போது அல்லது வேறு பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ளும்போது, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு மாத்திரம் செல்வதுடன், உத்தியோகபூர்வ வாடிக்கையாளர் சேவை வழிகள் ஊடாகத் தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்வது சிறந்தது எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வலைத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளக் கணக்குகள் தொடர்பில் தொடர்ந்தும் விழிப்புடன் இருக்குமாறு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பொதுமக்களிடம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வடக்கு, கிழக்கில் 2 இலட்சம் ஏக்கர் காணிகளை விடுவிக்க அமைச்சரவை அனுமதி கோரத் தீர்மானம்!
செய்திகள்

வடக்கு, கிழக்கில் 2 இலட்சம் ஏக்கர் காணிகளை விடுவிக்க அமைச்சரவை அனுமதி கோரத் தீர்மானம்!

October 19, 2026
ஞானசார தேரருக்கு விடுதலை இல்லையெனில் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்போம்; பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் கடும் எச்சரிக்கை!
செய்திகள்

ஞானசார தேரருக்கு விடுதலை இல்லையெனில் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்போம்; பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் கடும் எச்சரிக்கை!

October 19, 2026
இலங்கையில் ஒக்டோபர் 30 வரை கனமழை எச்சரிக்கை; வடக்கு, கிழக்கில் வெள்ள அபாயம்!
செய்திகள்

இலங்கையில் ஒக்டோபர் 30 வரை கனமழை எச்சரிக்கை; வடக்கு, கிழக்கில் வெள்ள அபாயம்!

October 19, 2026
முஸ்லிம் திருமணச் சட்டத்தில் திருத்தங்களைக் மேற்கொள்ளுமாறு முஸ்லிம் பெண்கள் செயற்பாட்டாளர்கள் கோரிக்கை !
செய்திகள்

முஸ்லிம் திருமணச் சட்டத்தில் திருத்தங்களைக் மேற்கொள்ளுமாறு முஸ்லிம் பெண்கள் செயற்பாட்டாளர்கள் கோரிக்கை !

October 19, 2026
டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு; லோரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்பு
செய்திகள்

டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு; லோரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்பு

October 19, 2026
நாட்டை வந்தடைந்தது பயணிகள் ட்ரோன்; இம்மாத இறுதியில் பரீட்சார்த்த பயணம்
செய்திகள்

நாட்டை வந்தடைந்தது பயணிகள் ட்ரோன்; இம்மாத இறுதியில் பரீட்சார்த்த பயணம்

October 19, 2026
Next Post
ஞானசார தேரருக்கு விடுதலை இல்லையெனில் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்போம்; பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் கடும் எச்சரிக்கை!

ஞானசார தேரருக்கு விடுதலை இல்லையெனில் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்போம்; பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் கடும் எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு