Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விமானத்தில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த இலங்கைப் பணிப்பெண்!

விமானத்தில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த இலங்கைப் பணிப்பெண்!

57 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

குவைத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த விமானத்தில் இலங்கை  பணிப் பெண் ஒருவர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

திருகோணமலையைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு குழந்தையைப் பிரசவித்துள்ளார்.

இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு பணிப்பெண்ணாகக் குவைத்திற்குச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், இன்று (19) அதிகாலை 2:52 க்கு குவைத் சிட்டி விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க நோக்கிப் புறப்பட்ட ‘அல் ஜசீரா’ விமானச் சேவைக்குச் சொந்தமான J9-551 ரக விமானத்தில் பயணித்தபோதே இவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

விமானப் பயணங்களின் போது கர்ப்பிணிப் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய மருத்துவ வழிகாட்டுதல்கள் மற்றும் விமானச் சேவை விதிகள் உள்ள நிலையில், குறித்த பெண் தனது கர்ப்பிணி நிலையை விமான நிலைய அதிகாரிகளிடமிருந்து மறைத்துப் பயணித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமான பணிக்குழாமினரின் உதவியுடன் எவ்வித சிக்கல்களுமின்றி விமானத்தினுள்ளேயே பிரசவம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

இச்சம்பவம் குறித்து விமானி, கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு உடனடியாகத் தகவல் வழங்கியதையடுத்து, விமானம் தரையிறங்குவதற்கு முன்னரே அவசர ஆம்பியூலன்ஸ் வண்டி, மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் குழுவினர் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, தரையிறங்கியதும் தாயும் சேயும் மேலதிக மருத்துவச் சிகிச்சைகளுக்காக நீர்கொழும்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் தற்போது நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் 316 மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள்!
செய்திகள்

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் 316 மாணவர்களுக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள்!

October 19, 2026
சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தகவல்
செய்திகள்

சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தகவல்

October 19, 2026
கேரள கஞ்சாவுடன் புத்தளம் நகரசபையின் முன்னாள் உறுப்பினர் கைது!
செய்திகள்

கேரள கஞ்சாவுடன் புத்தளம் நகரசபையின் முன்னாள் உறுப்பினர் கைது!

October 19, 2026
விடுதலை புலிகளின் 110 கிலோவுக்கும் மேற்பட்ட தங்கம் பசிலால் கொள்ளை?; ஆதாரங்களை உடைக்கும் பொன்சேகா
செய்திகள்

விடுதலை புலிகளின் 110 கிலோவுக்கும் மேற்பட்ட தங்கம் பசிலால் கொள்ளை?; ஆதாரங்களை உடைக்கும் பொன்சேகா

October 19, 2026
அமெரிக்காவுக்கு ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் கடும் எச்சரிக்கை; மீண்டும் தாக்கினால் பெரும் சேதம் ஏற்படுத்துவோம்!
செய்திகள்

அமெரிக்காவுக்கு ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் கடும் எச்சரிக்கை; மீண்டும் தாக்கினால் பெரும் சேதம் ஏற்படுத்துவோம்!

October 19, 2026
அகுரணையில் கோர விபத்து; சீமெந்து லொறி பல வாகனங்களுடன் மோதி 6 பேர் காயம்!
செய்திகள்

அகுரணையில் கோர விபத்து; சீமெந்து லொறி பல வாகனங்களுடன் மோதி 6 பேர் காயம்!

October 19, 2026
Next Post
விடுதலை புலிகளின் 110 கிலோவுக்கும் மேற்பட்ட தங்கம் பசிலால் கொள்ளை?; ஆதாரங்களை உடைக்கும் பொன்சேகா

விடுதலை புலிகளின் 110 கிலோவுக்கும் மேற்பட்ட தங்கம் பசிலால் கொள்ளை?; ஆதாரங்களை உடைக்கும் பொன்சேகா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு