Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈபிடிபி தலைமை அலுவலகத்தில் சிஐடி சோதனை; டக்ளஸிடமும் வாக்கு மூலம் பதிவு

ஈபிடிபி தலைமை அலுவலகத்தில் சிஐடி சோதனை; டக்ளஸிடமும் வாக்கு மூலம் பதிவு

49 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்ப்பாணத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் குற்றப்புலனாய்வு
துறையினர் நீண்ட நேரம் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்

தேடுதல் நடவடிக்கையை அடுத்து, கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நிர்வாக
பொறுப்பாளர் ஆகியோரிடம் வாக்கு மூலங்களையும் பெற்று சென்றுள்ளனர்.

குற்ற புலனாய்வு துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் யாழ்ப்பாண
நீதவான் நீதிமன்றில் தேடுதல் அனுமதியினை பெற்று இன்றைய தினம் குறித்த தேடுதல் நடவடிக்கையை
மேற்கொண்டுள்ளனர்

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள முந்தைய காலத்தில் ஸ்ரீதர் திரையரங்கு இயங்கிய கட்டடத்தில்
அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் நீண்ட நேரம் தேடுதலில் ஈடுபட்ட குற்ற புலனாய்வு பிரிவினர்,
இறுதியில் செயலாளர் மற்றும் நிர்வாக பொறுப்பாளர் ஆகியோரிடம் வாக்கு மூலம் பெற்று
சென்றுள்ளனர்

கடந்த 2001ஆம் ஆண்டு டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால்
வழங்கப்பட்ட துப்பாக்கி, 2019ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதூஷிடம்
கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளுக்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அதேவேளை ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் மீள கையளிக்கப்பட்ட துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள்
தொடர்பிலான விசாரணைகளும் நடைபெற்றது என்பதுடன், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் தகவல்களை
வெளியிட்ட ஆசாத் மௌலானாவிற்கு வேலை வாய்ப்பு வழங்கியமை தொடர்பிலும் அண்மையில்
டக்ளஸ் தேவானதாவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இவ்வாறான பின்னணியில் டக்ளஸ் தேவானந்தாவின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தினை
குற்றப்புலனாய்வு துறையினர் சோதனையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சர்வதேச திறந்த கராத்தே சுற்றுப்போட்டியில் வாழைச்சேனை மாணவர்கள் 42 பதக்கங்களை வென்று சாதனை!
செய்திகள்

சர்வதேச திறந்த கராத்தே சுற்றுப்போட்டியில் வாழைச்சேனை மாணவர்கள் 42 பதக்கங்களை வென்று சாதனை!

October 19, 2026
நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர் மின்வெட்டு; நேர அட்டவணை வெளியானது
செய்திகள்

நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு தொடர் மின்வெட்டு; நேர அட்டவணை வெளியானது

October 19, 2026
இலங்கையிலும் தென்படவுள்ள ‘ஓரியோனிட்ஸ்’ விண்கல் மழை; ஒக்டோபர் 21, 22ஆம் திகதிகளில் அவதானிக்கலாம்!
செய்திகள்

இலங்கையிலும் தென்படவுள்ள ‘ஓரியோனிட்ஸ்’ விண்கல் மழை; ஒக்டோபர் 21, 22ஆம் திகதிகளில் அவதானிக்கலாம்!

October 19, 2026
மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கைக் கதை திரைப்படமாகிறது; படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தீவிரம்!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்க்கைக் கதை திரைப்படமாகிறது; படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் தீவிரம்!

October 19, 2026
பிரான்ஸ் போராட்டம்: உள்துறை அமைச்சரின் இராஜினாமாவை நிராகரித்தார் மக்ரோன்
செய்திகள்

பிரான்ஸ் போராட்டம்: உள்துறை அமைச்சரின் இராஜினாமாவை நிராகரித்தார் மக்ரோன்

October 19, 2026
யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்புப் போராட்டம்!

October 19, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு