மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்தில் 6 கோடியே 70 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான குஷ் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வெளிநாட்டிலிருந்து தபால் மூலம் அனுப்பப்பட்ட இந்தப் போதைப்பொருட்களை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.












