மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் தம்பி மகனான கார்த்திக் சபேஷ் உடல் நலக் குறைவினால் நேற்று (19) இரவு காலமானார்.
அவரது உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரது உடலுக்கு திரைத்துறையைச் சார்ந்த பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இவர், பட்டத்து யானை, குளிர் 100, வல்லவன் ஆகிய திரைப்படங்களில் நடித்தவர்.
மேலும் கார்த்திக்கின் தந்தையான இசையமைப்பாளர் சபேஷ் முரளி கடந்த வருடம் ஒக்டோபர் 23ஆம் திகதி காலமானதைத் தொடர்ந்து தந்தை இறந்த அதே மாதத்தில் மகனும் காலமாகியுள்ளமை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தேனிசைத் தென்றல் தேவா காலமான ஓரிரு தினங்களிலேயே இவரது இறப்புச் செய்தி குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.







