திருகோணமலை முதல் காங்கேசன்துறை, கற்பிட்டி, கொழும்பு ஊடாக காலி வரையிலான கடற்பரப்புகளுக்கு கொந்தளிப்பான கடல் நிலை குறித்த எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இன்று (20) பி.ப. 04.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் நாளை மு.ப. 01.30 மணி வரை செல்லுபடியாகும்.
இதற்கமைய, திருகோணமலை முதல் காங்கேசன்துறை, கற்பிட்டி மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையிலான கரையைண்டிய கடற்பரப்புகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் குறித்த கடற்பரப்புகளில் தற்காலிகமாக மணிக்கு 60-70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், அவ்வேளைகளில் அக்கடற்பரப்புகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
எனவே, குறித்த கடற்பரப்புகளில் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் மற்றும் கடற்போக்குவரத்தில் ஈடுபடுவோர் இது குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.







