திருகோணமலை, சிங்ஹபுர 04ஆம் கட்டை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கொலைச் சம்பவம் நேற்று இரவு 8.00 மணி முதல் 9.00 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு உயிரிழந்தவர், திருகோணமலை, சிங்ஹபுர 04ஆம் கட்டை, இலக்கம் 54 என்ற முகவரியில் வசித்து வந்த மவுண்ட் வியூ கெஸ்ட் ஹோட்டலின் உரிமையாளரான டபிள்யூ.கே. நிமல் கொஸ்கொல்ல (56) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தக் கொலையை ஒரு குழுவினர் மேற்கொண்டிருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








