கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, பராட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டி வகைகளின் விலைகளை இன்று (21) நள்ளிரவு முதல் 5 ரூபாவால் அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கோதுமை மாவின் விலை உயர்வால் உணவுப் பொருட்களைத் தயாரிப்பதற்கான செலவுகள் அதிகரித்துள்ளன. இதனைக் கருத்திற்கொண்டே சிற்றுண்டி வகைகளின் விலைகளை உயர்த்தத் தீர்மானித்துள்ளதாகச் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த விலை அதிகரிப்பால் பராட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளை வாங்கும் நுகர்வோரின் செலவுகள் அதிகரிக்கவுள்ளன.








