Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரேமலால் ஜயசேகரவைக் கைது செய்ய உயர்நீதிமன்றம் திறந்த பிடியாணை!

பிரேமலால் ஜயசேகரவைக் கைது செய்ய உயர்நீதிமன்றம் திறந்த பிடியாணை!

50 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டு, உயர்நீதிமன்றம் இன்று (21) திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஊடாகக் குறித்த பிடியாணையைப் பிறப்பிக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், அதனை விரைவாகச் செயற்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கும் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, இன்று நீதிமன்றத்தில் ஆஜரான ஏனைய இரு பிரதிவாதிகளையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் கஹவத்தை பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில், பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது.

எனினும், அந்தத் தீர்ப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், பின்னர் மூவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்புக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட தரப்பினரால் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் விசாரணைகள் கடந்த செப்டம்பர் 4ஆம் திகதி நிறைவடைந்த நிலையில், பிரதிவாதிகள் மூவரையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உயர்நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது பிரேமலால் ஜயசேகர நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் வெளிநாடு சென்றுள்ளதாகச் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களைப் பரிசீலித்த பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாம், பிரேமலால் ஜயசேகரவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான திறந்த பிடியாணையைப் பிறப்பிக்க உத்தரவிட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

முல்லைத்தீவில் உயிரிழந்த தாய்; இருவருக்கு மறுவாழ்வளித்த குடும்பத்தின் நெகிழ்ச்சியான முடிவு!
செய்திகள்

முல்லைத்தீவில் உயிரிழந்த தாய்; இருவருக்கு மறுவாழ்வளித்த குடும்பத்தின் நெகிழ்ச்சியான முடிவு!

October 21, 2026
தெற்கு லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்; பல பகுதிகளில் தீவிர குண்டுவீச்சு
உலக செய்திகள்

தெற்கு லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்; பல பகுதிகளில் தீவிர குண்டுவீச்சு

October 21, 2026
சம்மாந்துறையின் 10ஆவது ஜும்ஆ பள்ளிவாசலாக மல்கம்பிட்டி பள்ளிவாசல் பிரகடனம்
செய்திகள்

சம்மாந்துறையின் 10ஆவது ஜும்ஆ பள்ளிவாசலாக மல்கம்பிட்டி பள்ளிவாசல் பிரகடனம்

October 21, 2026
செம்மணி மனித எச்சங்கள் தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவால் உயிரிழந்தவர்களுடையதாக இருக்கலாம்; நீதிமன்றில் ஆவணம்
செய்திகள்

செம்மணி மனித எச்சங்கள் தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவால் உயிரிழந்தவர்களுடையதாக இருக்கலாம்; நீதிமன்றில் ஆவணம்

October 21, 2026
மண்டூர் நீர் வழங்கல் திட்டக் காரியாலயத்தில் வாணி விழா!
செய்திகள்

மண்டூர் நீர் வழங்கல் திட்டக் காரியாலயத்தில் வாணி விழா!

October 21, 2026
சம்மாந்துறையில் உயிருக்குப் போராடும் யானை; உடனடி நடவடிக்கை கோரும் விவசாயிகள்!
செய்திகள்

சம்மாந்துறையில் உயிருக்குப் போராடும் யானை; உடனடி நடவடிக்கை கோரும் விவசாயிகள்!

October 21, 2026
Next Post
செம்மணி மனித எச்சங்கள் தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவால் உயிரிழந்தவர்களுடையதாக இருக்கலாம்; நீதிமன்றில் ஆவணம்

செம்மணி மனித எச்சங்கள் தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவால் உயிரிழந்தவர்களுடையதாக இருக்கலாம்; நீதிமன்றில் ஆவணம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு