ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேரில் வந்து மன்னிப்புக் கோரி, கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகக் கூறினால் மட்டுமே, அவருக்குப் பிரித் நீர் வழங்கி பிரித் நூல் கட்டுவோம் என பலாங்கொடை கஸ்ஸப தேரர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பலாங்கொடை கஸ்ஸப தேரர், ஜனாதிபதி தம்மிடம் வந்து வணங்கி, “தேரரே, எங்களை மன்னித்துவிடுங்கள். மகா சங்கத்தினருக்கு இவ்வளவு வலிமை இருக்குமென நாங்கள் நினைக்கவில்லை.
என்னால் தவறு நடந்துவிட்டது. ஞானசார தேரரை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கிறேன்” எனக் கூறினால் மட்டுமே அவருக்குப் பிரித் நீர் வழங்கி கையில் பிரித் நூல் கட்டத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி பௌத்த பிக்குகள் முன்னெடுத்து வரும் போராட்டப் பின்னணியில், பலாங்கொடை கஸ்ஸப தேரரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.








