தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால், ஆற்றின் இரு கரைகளிலும் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நீர்ப்பாசனத் திணைக்களம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.







