உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரைத் தற்காலிகமாக நிறுத்தி, தூதரக ரீதியில் அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு தாம் முழுமையான ஆதரவு வழங்குவதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
நோர்வேயின் ஒஸ்லோ நகருக்குச் சென்றுள்ள ஜெலன்ஸ்கி, அங்கு அமெரிக்காவின் சிறப்புத் தூதுவர் ஸ்டீவ் விட்கொஃப் உடன் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன், அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் தலைவர்கள் இணைந்து முத்தரப்புப் பேச்சுவார்த்தையை நடத்துவது மிகவும் அவசியமானது என்றும் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்தப் பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பிய நாடுகளையும் இணைத்துக்கொள்வது சிறந்ததாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா முன்னெடுத்து வரும் தற்போதைய தூதரக முயற்சிகள் மூலம் ரஷ்யாவிடமிருந்து விரைவில் சாதகமான முடிவு கிடைக்கும் என நம்புவதாகவும் உக்ரைன் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.







