அனைத்து மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களையும் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
48cc கொள்ளளவு கொண்ட மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்யத் தேவையில்லை என சில விற்பனையாளர்கள் தெரிவித்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இவ்வாறான மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்யாமல் பொதுவீதிகளில் செலுத்திச் சென்றால், சாரதிகளுக்கு எதிராகப் பொலிஸார் அபராதம் விதிக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, வாகனங்களைப் பதிவு செய்வது கட்டாயம் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.







