Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
‘அனைத்து குண்டுகளின் தந்தை’ ஆயுதம் தயார்; அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க மிரட்டல்!

‘அனைத்து குண்டுகளின் தந்தை’ ஆயுதம் தயார்; அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க மிரட்டல்!

49 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உலகையே உலுக்கும் ‘அனைத்து குண்டுகளின் தந்தை’ ஆயுதம் தயார் என அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.

ஈரானின் எரிசக்தி கட்டமைப்பு மற்றும் நிலத்தடி அணுசக்தி தளங்களை குறிவைக்க, அமெரிக்காவின் மிகப்பெரிய அணுசக்தி அல்லாத வெடிகுண்டான ஜிபியு-43/பி எம்.ஓ.ஏ.பி. எனப்படும் ‘அனைத்து வெடிகுண்டுகளின் தாய்’ வெடிகுண்டை பயன்படுத்த உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அண்மையில் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர், “இது அணு ஆயுதம் அல்ல; அணு குண்டைப் போன்ற அழிவுத்திறன் கொண்ட ஒரு மிகப்பெரிய சாதாரண குண்டுதான். நாங்கள் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டிய அவசியமும் இல்லை, பயன்படுத்தவும் மாட்டோம்” என்றார். அதாவது அடுத்த மாதம் அங்கு நடக்கவுள்ள இடைத்தேர்தலுக்கு பிறகு ஈரான் மீது அதிபயங்கர தாக்குதல் நடத்துவோம் என சூசகமாக அறிவித்திருந்தார்.

டிரம்பின் இந்த மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்கா மற்றும் உலக வல்லரசுகளுக்கே சவால் விடும் வகையில், அதைவிட பல மடங்கு அழிவுத்திறன் கொண்ட அனைத்து குண்டுகளின் தந்தை’ என்ற புதிய பிரமாண்ட இராணுவ ஆயுதத்தை ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது. 

ஈரானின் இந்த புதிய ஆயுதம் 10 தொன் எடையுள்ள சக்திவாய்ந்த சூப்பர் வெடிகுண்டாகும்.

இது ரஷியாவின் மிகப்பெரிய போர் விமானமான இலூயுஷன் (ஐஎல்-76) ரக கனரக போக்குவரத்து விமானங்களில் இருந்து வீசும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் 9.8 தொன் எடையுள்ள ஜிபியு-43/பி வெடிகுண்டு 9 நகரத் தொகுதிகளை அழிக்கும் திறன் கொண்டது. அதனை காட்டிலும் ஈரான் அறிமுகப்படுத்தியுள்ளது 200 கிலோ கூடுதலாக உள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனின் வல்லமை குறித்து ஈரான் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.

இஸ்ரேலுடன் நடந்த 12 நாள் மோதலுக்குப் பிறகு, ஈரானின் ஏவுகணை கையிருப்பு அதிகரித்துள்ளதாக ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இதற்கிடையில், ஈரானின் தேசிய பாதுகாப்பு குழுவின் துணைத் தலைவர் அப்பாஸ் மொக்தடேய் அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

“அமெரிக்கா இத்தகைய ஆயுதங்களைப் பயன்படுத்தினால். வெள்ளை மாளிகை கருப்பு மாளிகையாக மாறும்” என்று அவர் கூறினார். மேலும், ஈரான் போர் மீண்டும் தொடங்கினால் அமெரிக்க இராணுவத்தினர், பிராந்திய ரகசிய தளங்கள் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள நட்பு நாடுகளின் எரிசக்தி நிறுவனங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் அனைத்தும் தாக்குதலுக்கு உள்ளாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

முன்பள்ளிக் குழந்தைகளுக்குத் தனிப்பயிற்சி வகுப்புகள் நடத்தத் தடை!
செய்திகள்

முன்பள்ளிக் குழந்தைகளுக்குத் தனிப்பயிற்சி வகுப்புகள் நடத்தத் தடை!

October 23, 2026
ஞானசார தேரர் விடுதலைக்காக போராடும் பிக்குமாருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
செய்திகள்

ஞானசார தேரர் விடுதலைக்காக போராடும் பிக்குமாருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

October 23, 2026
விளக்கமறியலில் உள்ள நாமலுக்கு மகிந்த ராஜபக்ஷ கடிதம்; நீதிமன்றம் குறித்து முக்கிய அறிவுரை!
செய்திகள்

விளக்கமறியலில் உள்ள நாமலுக்கு மகிந்த ராஜபக்ஷ கடிதம்; நீதிமன்றம் குறித்து முக்கிய அறிவுரை!

October 23, 2026
குறைந்த அழுத்தப் பிரதேசத்தின் தாக்கம் இன்றும்; 75 மி.மீ மழைக்கு எதிர்வுகூறல்!
செய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசத்தின் தாக்கம் இன்றும்; 75 மி.மீ மழைக்கு எதிர்வுகூறல்!

October 23, 2026
விலங்குகளுக்கு மட்டும் பரவக்கூடிய ஷமொண்டா வைரஸ் மனிதனிடம் கண்டுபிடிப்பு; பிரான்ஸில் ஒருவர் உயிரிழப்பு!
உலக செய்திகள்

விலங்குகளுக்கு மட்டும் பரவக்கூடிய ஷமொண்டா வைரஸ் மனிதனிடம் கண்டுபிடிப்பு; பிரான்ஸில் ஒருவர் உயிரிழப்பு!

October 22, 2026
இளம் பெண் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு; NPP உறுப்பினர் கைது!
செய்திகள்

இளம் பெண் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு; NPP உறுப்பினர் கைது!

October 22, 2026
Next Post
விளக்கமறியலில் உள்ள நாமலுக்கு மகிந்த ராஜபக்ஷ கடிதம்; நீதிமன்றம் குறித்து முக்கிய அறிவுரை!

விளக்கமறியலில் உள்ள நாமலுக்கு மகிந்த ராஜபக்ஷ கடிதம்; நீதிமன்றம் குறித்து முக்கிய அறிவுரை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு