Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விளக்கமறியலில் உள்ள நாமலுக்கு மகிந்த ராஜபக்ஷ கடிதம்; நீதிமன்றம் குறித்து முக்கிய அறிவுரை!

விளக்கமறியலில் உள்ள நாமலுக்கு மகிந்த ராஜபக்ஷ கடிதம்; நீதிமன்றம் குறித்து முக்கிய அறிவுரை!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கு முக்கிய விடயங்களை உள்ளடக்கிய கடிதமொன்றை அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகிந்த ராஜபக்ஷவின் செயலாளர் ஒருவரால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் கடிதத்தின் முழுமையான உள்ளடக்கங்கள் இதுவரை ஊடகங்களிடம் வெளியிடப்படவில்லை.

எனினும், குறித்த கடிதத்தில் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்து செயற்படுமாறு நாமலுக்கு மகிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2010ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ஷ அரசியலில் பிரவேசித்த காலப்பகுதியை நினைவுகூர்ந்துள்ள மகிந்த ராஜபக்ஷ, சிறைத்தண்டனை உள்ளிட்ட சவால்களையும் துன்பங்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருந்தால் மட்டுமே அரசியலில் ஈடுபட அனுமதித்ததாகக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், தனது அரசியல் வாழ்க்கையின் ஆரம்பகாலத்திலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டொன்றின் அடிப்படையில் சிறைவாசத்தை எதிர்கொண்டதாக அவர் நினைவுபடுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது தாமும் தனது மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவும் நவலோக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தமது மகன்களான யோஷித மற்றும் ரோஹித ஆகியோர் தங்களது நலன்களைக் கவனித்து வருவதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக, நாமல் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தபோது அவரிடம் குறித்த கடிதத்தைக் கையளித்ததாகவும் செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், கடிதத்தின் முழுமையான உள்ளடக்கங்கள் உத்தியோகபூர்வமாக வெளியாகாத நிலையில், அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

புத்தளம் – அநுராதபுரம் வீதியில் கோர விபத்து; இருவர் பலி; 15க்கும் மேற்பட்டோர் காயம்!
செய்திகள்

புத்தளம் – அநுராதபுரம் வீதியில் கோர விபத்து; இருவர் பலி; 15க்கும் மேற்பட்டோர் காயம்!

October 23, 2026
முன்பள்ளிக் குழந்தைகளுக்குத் தனிப்பயிற்சி வகுப்புகள் நடத்தத் தடை!
செய்திகள்

முன்பள்ளிக் குழந்தைகளுக்குத் தனிப்பயிற்சி வகுப்புகள் நடத்தத் தடை!

October 23, 2026
ஞானசார தேரர் விடுதலைக்காக போராடும் பிக்குமாருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
செய்திகள்

ஞானசார தேரர் விடுதலைக்காக போராடும் பிக்குமாருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

October 23, 2026
‘அனைத்து குண்டுகளின் தந்தை’ ஆயுதம் தயார்; அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க மிரட்டல்!
செய்திகள்

‘அனைத்து குண்டுகளின் தந்தை’ ஆயுதம் தயார்; அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க மிரட்டல்!

October 23, 2026
குறைந்த அழுத்தப் பிரதேசத்தின் தாக்கம் இன்றும்; 75 மி.மீ மழைக்கு எதிர்வுகூறல்!
செய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசத்தின் தாக்கம் இன்றும்; 75 மி.மீ மழைக்கு எதிர்வுகூறல்!

October 23, 2026
விலங்குகளுக்கு மட்டும் பரவக்கூடிய ஷமொண்டா வைரஸ் மனிதனிடம் கண்டுபிடிப்பு; பிரான்ஸில் ஒருவர் உயிரிழப்பு!
உலக செய்திகள்

விலங்குகளுக்கு மட்டும் பரவக்கூடிய ஷமொண்டா வைரஸ் மனிதனிடம் கண்டுபிடிப்பு; பிரான்ஸில் ஒருவர் உயிரிழப்பு!

October 22, 2026
Next Post
ஞானசார தேரர் விடுதலைக்காக போராடும் பிக்குமாருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

ஞானசார தேரர் விடுதலைக்காக போராடும் பிக்குமாருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு