இலங்கை மின்சார சபைகோரியுள்ள புதிய கட்டணத் திருத்தத்துக்கு அமைவாக, 0-30 அலகுகளுக்கு நுகர்வோர் செலுத்த வேண்டிய கட்டணம் 80 சதவீதத்தால் அதிகரிக்கப்படும் என்று பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபை கோரும் கட்டணத் திருத்தம் சட்டவிரோதமானது என்றும்
22 சதவீதம் அல்லது அனைத்து அலகுகளுக்கும் 8 ரூபாய் அதிகரிப்பு கோரப்பட்டுள்ளதாக
குறிப்பிட்டுள்ளார்.
அனல் மின் நிலையங்களிலிருந்து பற்றாக்குறையாகவுள்ள 750 கிகாவோட் நீர் மின் உற்பத்தியை
பெறுவதற்கான மேலதிக செலவை மீட்டெடுப்பதே மின் கட்டணத்தை அதிகரிப்பதன்
நோக்கம் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமற்போனதால்,
மின் உற்பத்திக்கு மேலதிக செலவு ஏற்படும் என்றும் இந்த ஆண்டு 4500 கிகாவொட் நீர் மின் எதிர்பார்க்கப்படுவதாகவும் மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
மின்சார உற்பத்திக்காக செலவிடப்படும் தொகையை ஈடு செய்யும் வகையில்
கட்டண திருத்தத்திற்கு அனுமதியளிக்குமாறு பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை
விடுக்கப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
.பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவானது இவ்வருடத்தில் மூன்றாவது தடவையாக மின்சார கட்டணத்திருத்தம் தொடர்பில் பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறியும் நடவடிக்கையை
ஆரம்பித்துள்ளதுடன், எதிர்வரும் 18 ஆம்திகதி வரை அவற்றை முன்வைக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.