இலங்கையின் பிரதான கடனாளிகளான ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடனை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளில் இந்த மாதம் இறுதியில் ஒரு உடன்பாட்டை இலங்கை எட்டக்கூடும் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இலங்கை தனது சர்வதேச மற்றும் உள்நாட்டு கடன்களை திருப்பிச் செலுத்துவதை கடந்த ஆண்டு மே மாதம் நிறுத்திய பின்னர், அதன் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்புச் செய்வது தொடர்பாக ஜப்பான், சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட கடன் வழங்குநர்களிடமும் மற்றும் இருதரப்பு கடன் வழங்குநர்களுடனும் இலங்கை பல சுற்று பேச்சுக்களை நடத்தியது.
அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தியா உள்ளிட்ட இலங்கையின் முக்கிய கடன் வழங்குநர்கள் குழு, மொரோக்கோவில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி கூட்டங்களின் போது அந்த நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட விரும்புகிறது.
இருப்பினும் இந்தக் குழுவில் சேர்வதை சீனா எதிர்க்கிறது.
இலங்கையின் ஒட்டுமொத்த வெளிநாட்டுக் கடனில் 42 வீதத்தை அதன் மிகப்பெரிய ஒற்றைக் கடனாளியான சீனாவும், அதனைத் தொடர்ந்து ஜப்பான் 24 வீதமும், இந்தியா 15 வீதமும், பிரான்ஸ் 4 வீதமும் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.