Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தனியார் மயமாக்கப்படவிருக்கும் 600 எரிபொருள் நிரப்பு நிலையங்கள்!

தனியார் மயமாக்கப்படவிருக்கும் 600 எரிபொருள் நிரப்பு நிலையங்கள்!

3 years ago
in செய்திகள்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான 600 எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு தனியார் நிறுவனத்துக்கு வழங்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை தனியார்மயமாக்கினால் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தொழில்வாய்ப்புகளை இழப்பார்கள் என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் சேவை சங்க தலைவர் ஜகத் விஜயகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.

துறைமுகம், மின்சாரம் மற்றும் பெற்றோலியம் ஆகிய துறைகளின் தொழில்சங்க தலைவர்களுடன் நேற்று நடந்த பேச்சின் பின்னர், செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் கொள்வனவுக்கு தேவையான டொலரை சுயமாக திரட்டிக் கொள்கிறது. கூட்டுத்தாபனம் கடந்த ஜனவரி மாதம் 1300 கோடி ரூபாய், பெப்ரவரி மாதம் 900 கோடி ரூபாய் இலாபமடைந்துள்ளது. இவ்வாறு இலாபமடையும் நிறுவனத்தையே அரசாங்கம் தனியார் மயப்படுத்த தீர்மானித்துள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் 600 எரிபொருள் நிரப்பு நிலையங்களை வெளிநாட்டு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கினால் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தொழில்வாய்ப்புகளை இழக்க நேரிடும். இதனால் நாட்டில் பெரும் பிரச்னைகள் தோற்றம் பெறும்.

மறுசீரமைப்பு என்று குறிப்பிட்டுக்கொண்டு அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்தும்போது பலர் தொழில் வாய்ப்புகளை இழப்பார்கள். இதற்கான மாற்று நடவடிக்கைகள் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் பதிலளிக்கையில்,அம்பாந்தோட்டை துறை முகத்தை அண்மித்த பகுதியை
சீனாவின் சினொபெக் நிறுவனத்துக்கும், திருகோணமலை துறைமுகம் மற்றும் அதனை அண்மித்த பகுதியை இந்தியாவுக்கும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கீரியும் பாம்பும் போல் பகைத்துக்கொள்ளும் சீனா, இந்தியா ஆகிய நாடுகள் இலங்கைக்குள் முரண்பட்டுக்
கொண்டால் தேவையில்லாத பிரச்னையை நாடு எதிர்கொள்ள நேரிடும்.இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை தனியார் மயப்படுத்தும் செயல்பாட்டுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. சகல தொழில்சங்கங்களையும் ஒன்றிணைத்து மாபெரும் தொழில்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் – என்றார்.

தொடர்புடையசெய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்
செய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்

July 24, 2026
நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு
செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு

July 24, 2026
இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
கோட்டாபயவுக்கு எதிராக புதிய விசாரணை திருப்பம்; உறவினர் CID முன் வாக்குமூலம்!
செய்திகள்

கோட்டாபயவுக்கு எதிராக புதிய விசாரணை திருப்பம்; உறவினர் CID முன் வாக்குமூலம்!

July 24, 2026
கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!
செய்திகள்

கூகுள் கணக்கை மீட்க இனி செல்ஃபி வீடியோ; புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்!

July 24, 2026
Next Post
சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; இளைஞனைத் தேடி பொலிஸார் வலைவீச்சு!

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; இளைஞனைத் தேடி பொலிஸார் வலைவீச்சு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு