மாதாந்த விலை சூத்திரத்தின்படி இம்மாதத்திற்கான சமையல் எரிவாயு விலை திருத்தம் இன்று (04) அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
லிட்ரோ எரிவாயு நிறுவனம் செப்டம்பர் 4 ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிவாயு விலையை உயர்த்த நடவடிக்கை எடுத்திருந்தது.
உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்திருந்தார்.
இதன்படி 2,982 ரூபாவாக இருந்த 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 3,127 ரூபாவாகவும், 5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 58 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 1,256 ரூபாவாகவும் விலை மாற்றமடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.