பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகின.
பாராளுமன்ற அமர்வு இன்று (05) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகி மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை;
(i) இலங்கைத் துறைமுக அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு
(ii) குடியியல் வான்செலவு (திருத்தச்) சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு
(iii) குடியியல் வான்செலவுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iv) கப்பற்றொழில் முகவர்களுக்கு கப்பற்சரக்கனுப்புநர்க்கு, கலன் செயற்படுத்தாப் பொதுக்காவுநர்க்கு மற்றும் கொள்கலன் செயற்படுத்துநர்க்கு உரிமமளித்தல் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
அதனையடுத்து, பி.ப. 5.00 மணி முதல் பி.ப. 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும்.
பாராளுமன்ற அமர்வின் நேரடி ஒளிபரப்பை கீழே காணலாம்.