சீனாவின் Change – 8 விண்கலம் மூலம் நிலவில் ஆராய்ச்சி செய்வதற்கான ஒத்துழைப்பை மேற்கொள்வதற்கு உலக நாடுகளுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது.
நிலவில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக Change – 8 விண்கலத்தை 2028ம் ஆண்டு விண்ணில் செலுத்த சீனா திட்டமிட்டுள்ளது.
நிலவு ஆராய்ச்சியில் சீனாவின் 4வது கட்ட ஆராய்ச்சி இதுவாகும்.
இந்த திட்டத்தில் இணைந்து செயல்பட விரும்பும் நாடுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் தெடர்புக்கொள்ள முடியும் என சீனா அழைப்பு விடுத்துள்ளது.
அடுத்த ஆண்டு செப்டம்பருக்குள் எந்த நாட்டுடன் இணைந்து செயல்படுவது என்பது பற்றி அறிவிக்கப்படும் என சீனா தெரிவித்துள்ளது.இந்த நிலையில் கடந்த மாதம் இந்தியா தனது சந்திரயான் – 3 விண்கலத்தை நிலவில் தரையிறக்கியது. தென்துருவத்தில் சென்ற முதல் நாடு என்ற சாதனையையம் இந்தியா நிறைவேற்றியிருந்தது.
அதே வாரத்தில், ரஷ்யாவின் முதல் சந்திர பயணம் லூனா 25 விண்கலம் சந்திரனின் மேற்பரப்பில் மோதி தோல்வியில் முடிந்தமையும் குறிப்பிடத்தக்கது.