கூகுளுக்கு மிகப்பெரிய வர்த்தகமே அதன் சர்ச் இன்ஜின் சேவை தான், குறிப்பாக ஸ்மார்ட்போன்களில் மோனோபோலியாகவே செயல்படுகிறது என்றால் மிகையில்லை. இப்படியிருக்கையில் ஆப்பிள் நிறுவனமானது கூகுளின் ஆதிக்கத்தை உடைக்க பல முறை முயற்சி செய்தும் தோல்வி அடைந்து தொடர்ந்து கூகுள் நிறுவனத்தையே நம்பியிருந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் ஜப்பான் நாட்டில் கூகுள் நிறுவனத்தின் பிக்சல் போன்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிகப்படியான விற்பனையை பதிவு செய்து ஆப்பிள் ஐபோன் ஆதிக்கத்தையும், சந்தை பங்கீட்டையும் குறைத்தது.ஜாப்பானில் ஆப்பிளை தோற்கடிப்பது என்பது அமெரிக்காவில் தோற்கடிப்பது போன்றது. காரணம் அமெரிக்காவிலும் சரி, ஜப்பானிலும் சரி 55 சதவீதத்திற்கும் அதிகமான சந்தை பங்கீட்டு ஆதிக்கத்தை வைத்திருப்பது ஆப்பிள் ஐபோன் தான்.
இப்படியிருக்கும் சூழ்நிலையில், ஆப்பிள் சமீபத்தில் DuckDuckGo என்ற பிரபல சர்ச் இன்ஜின் நிறுவனத்துடன் தனது Safari browser-ல் பிரைவேட் மோட் பிரவுசிங் சேவைக்கு கூகுள் சர்ச் இன்ஜினை நீக்கிவிட்டு DuckDuckGo சர்ச் இன்ஜினை வைக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
அமெரிக்காவில் கூகுள் நிறுவனத்திற்கு எதிராக anti-trust வழக்கு நடைபெற்று வரும் வேளையில் இதுகுறித்த முடிவுகள் வெளியான உடனேயே ஆப்பிள் – DuckDuckGo தொடர்பான ஒப்பந்தம் வெளிச்சத்திற்கு வரும் என தெரிகிறது.