அடுத்த வருடம் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதனைக் கருத்தில் கொண்டு அரிசி கையிருப்பை பராமரிக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.
இதனிடையே கோழி இறைச்சியின் விலையை குறைக்கும் அரசின் முயற்சி தோல்வியடைந்து வருகிறது. கோழிப்பண்ணை உற்பத்தி நிறுவனங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உரிய முடிவுகள் கிடைக்காததே அதற்குக் காரணம்.
பாரியளவிலான கோழி உற்பத்தி நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
சந்தையில் பொருட்களின் விலைகள் போதியளவு குறைவடையவில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.