Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட இளம் யுவதி; விசாரணையில் வெளியாகிய தகவல்கள்!

மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட இளம் யுவதி; விசாரணையில் வெளியாகிய தகவல்கள்!

3 years ago
in செய்திகள்

இரத்தினபுரி பகுதியில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட இளம் யுவதியின் மரணம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரத்தினபுரி, நிரியெல்ல பகுதியைச் சேர்ந்த சச்சினி ஜினாதாரி என்ற 25 வயதுடைய இளம் யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றும் குறித்த யுவதி பணி நிமித்தமாக இரத்தினபுரிக்கு பேருந்தில் செல்வதற்காக காலை 06.30 க்கு வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த யுவதியின் காதலன் வழமைப்போன்று காலை அழைப்பினை மேற்கொண்ட போது தொலைப்பேசி இயங்காத காரணத்தினால் உடனடியாக யுவதியின் தாயாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.இதனை தொடர்ந்து நீண்ட நேர தேடுதலின் பின்னர் சச்சினி குறித்த தகவல் கிடைக்காததால், குடும்பத்தினர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் பின்னர் யுவதி வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த யுவதி ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பட்டதாரி என்பதுடன் மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் மூத்த மகளாவார்.இரத்தினபுரி பதில் நீதவான் சுமித் ஆனந்தவினால் மரணம் தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக சடலம் சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது கொலையாக இருக்கலாம் எனவும் கொலைக்கு முன்னர் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் யுவதியின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி மற்றும் அலபாத்த பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
Next Post
அதிகரிக்கும் சம்பளம்- வரிமான வரிக்குள் சிக்கப்போகும் அரச ஊழியர்கள்; அமைச்சர் நளின் பெர்னாண்டோ!

அரச ஊழியர்களுக்கு ஒரு நாள் ஊதியக்குறைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு