நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ்நாடு சென்னை மாம்பலத்தில் இன்று (15/10/2023) நடைபெறவிருந்த இலங்கை மலையகத் தமிழர் 200 ஆண்டு அவல வாழ்வும் அதற்கான தீர்வுகளும் பற்றிய ஆய்வு மாநாட்டுக்கு தமிழக காவல்துறை தடைவிதித்துள்ளது.
தமிழக முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் தலைமையில் பல அறிஞ்ஞர்கள் பங்குபற்றலுடன் நடைபெறவிருந்த இந்த மாநாட்டிற்கு அதிரடியாக காவல்துறை தடைவிதித்துள்ளது.
குறித்த தடையுயை நீக்கி மாநாட்டை மீண்டும் நடாத்த ஏற்பாட்டாளர்கள் நீதி மன்றத்தை தற்போது நாடி உள்ளனர் எனத்தெரியவருகிறது.








