Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நியூசிலாந்தில் பொதுத்தேர்தல்; புதிய பிரதமரானார் கிறிஸ்டோபர் லக்சன்!

நியூசிலாந்தில் பொதுத்தேர்தல்; புதிய பிரதமரானார் கிறிஸ்டோபர் லக்சன்!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள்

நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. எதிர்த்து போட்டியிட்ட தேசிய கட்சி வெற்றி வாகை சூடியதால் அதன் தலைவரான கிரிஸ்டோபர் லக்சன் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து நாட்டின் பிரதமராக இருந்த ஜெசிந்தா ஆர்டன் கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவரது ஆட்சியில் கொரோனா தொற்று நடவடிக்கை, ஊழல் குற்றச்சாட்டு போன்ற காரணங்களால் பொதுமக்களின் நம்பிக்கையை இழந்தார். இந்த நிலையில் நெருக்கடிகள் அதிகரிக்கவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 9 மாதங்கள் பிரதமராக இருந்த நிலையில் நியூசிலாந்து நாட்டின் 54-வது நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆளும் தொழிலாளர் கட்சி சார்பில் கிறிஸ் ஹிப்கின்ஸ் பிரதமர் பதவிக்காக வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து தேசிய கட்சி சார்பில் அதன் தலைவர் கிறிஸ்டோபர் லக்சன் என்பவர் போட்டியிட்டார்.

இந்த தேர்தலில் வாக்குறுதிகளாக பணவீக்கம் மற்றும் அண்ணிய செலாவணி கட்டுப்பாடு, சர்வதேச நாடுகள் உடனான நட்புறவு, கல்வி, தொழில் ஆகியவற்றை மேம்படுத்துவதாகவும் தனது பிரச்சாரத்தை முன்வைத்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட கிறிஸ்டோபர் லக்சன் நாட்டின் அரசியல் திட்டங்கள் வகுப்பதில் பூர்வக்குடிகளின் பங்கு, வரி குறைப்பு, இலவச மருத்துவம் ஆகியவற்றை வழங்குவதாக அறிவித்தார்.

இந்தநிலையில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அறிவித்தப்படி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் வாக்களித்தனர். வாக்கெடுப்பு நடந்து முடிந்து ஓட்டு எண்ணிக்கை உடனடியாக நடத்தப்பட்டது. இதில் ஆளுங்கட்சியான தொழிலாளர் கட்சி 26 சதவீத வாக்கு எண்ணிக்கையை பெற்றது. அதனை எதிர்த்த தேசிய கட்சி 40 சதவீதத்திற்கும் அதிகமான வாக்கு சதவீதத்தை பெற்றது. இதன் மூலம் தேசிய கட்சியின் கிரிஸ்டோபர் லக்சன் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்
உலக செய்திகள்

ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்

September 13, 2026
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்

September 13, 2026
நாய்களை பதிவு செய்வது கட்டாயம்; புதிய சட்டமூலம் அறிமுகம்
செய்திகள்

நாய்களை பதிவு செய்வது கட்டாயம்; புதிய சட்டமூலம் அறிமுகம்

September 13, 2026
திருகோணமலையில் போதை லேகியம் விற்ற ஆறு கடைகள் சிக்கியது
செய்திகள்

திருகோணமலையில் போதை லேகியம் விற்ற ஆறு கடைகள் சிக்கியது

September 13, 2026
“மகன் திருடும்போதே தந்தை தடுத்திருக்க வேண்டும்; கைது செய்த பின்னர் கண்ணீர் வடிப்பதில் பயனில்லை”; ஜனாதிபதி
செய்திகள்

“மகன் திருடும்போதே தந்தை தடுத்திருக்க வேண்டும்; கைது செய்த பின்னர் கண்ணீர் வடிப்பதில் பயனில்லை”; ஜனாதிபதி

September 13, 2026
கந்தளாயில் இரண்டு தனியார் பேருந்து சாரதிகள் கைது
செய்திகள்

கந்தளாயில் இரண்டு தனியார் பேருந்து சாரதிகள் கைது

September 13, 2026
Next Post
நாமல் மீது நிலுவைத் தொகை குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சி தலைவராகும் நாமல்?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.