உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் அவுஸ்திரேலியா அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
லக்னோ மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமான இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 43.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 209 ஓட்டங்களைப் மட்டுமே பெற்றது.
பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் Adam Zampa, 4 விக்கெட்டுக்களை பெற்றார்.
இலங்கை அணி சார்பில் Kusal Perera 78 ஓட்டங்களையும் Pathum Nissanka 61 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்நிலையில் 210 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 35.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அவுஸ்திரேலியா அணி சார்பில் Mitchell Marsh அதிகபட்சமாக 52 ஓட்டங்களையும், Josh Inglis 58 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் Dilshan Madushanka மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இந்த போட்டியில் வெற்றிப் பெற்றதன் ஊடாக அவுஸ்திரேலியா அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில் இலங்கை அணி தான் கலந்து கொண்ட மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.