ஐக்கிய நாடுகளின் வெசாக் விழாவை எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் தற்போதுள்ள பௌத்த மத மற்றும் கலாசார உறவை மேலும் மேம்படுத்தும் வகையில் இரு நாடுகளினதும் பிரதிநிதிகளை பரிமாறிக்கொள்வதன் மூலம் வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தப்படும் எனவும் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.