அரச வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்ட குருசெத கடன் திட்டத்தின் கீழ் கண்டி மற்றும் கம்பளை மாவட்டத்தில் அமைந்துள்ள இரண்டு அரச வங்கிக் கிளைகளிலிருந்து போலி ஆவணங்கள் தயாரித்து பண மோசடி செய்ததாக சந்தேகத்தின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொது முறைப்பாடுகள் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குழு பெண் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஹிந்தகலை பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடைய ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை ஒருவர் ஆவார்.
இவர் இரண்டு வங்கிக் கிளைகளில் இருந்தும் சுமார் 26 போலி ஆவணங்களைத் தயாரித்து சுமார் 42 மில்லியன் 55 ஆயிரம் ரூபாய் பண மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.