Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருமலையை பௌத்த மாவட்டமாக மாற்றுகின்ற செயற்பாடுகள் தீவிரம்; சுமந்திரன் எம்.பி குற்றச்சாட்டு!

திருமலையை பௌத்த மாவட்டமாக மாற்றுகின்ற செயற்பாடுகள் தீவிரம்; சுமந்திரன் எம்.பி குற்றச்சாட்டு!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

திருமலையை பௌத்த மாவட்டமாக மாற்றுகின்ற நீண்ட கால திட்டம் இப்பொழுது துரித கதியில் இடம்பெற்றுவருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பணிமனையில் நேற்று (24) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் வெவ்வேறு பிரதேசங்களில் இருந்தும் மக்கள் இங்கே வருகை தந்து தங்களுடைய பல பிரச்சினைகளை எமக்கு தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.

இதில் பிரதானமான பிரச்சினையாக நில அபகரிப்பு தொடர்பிலேயே பல குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதே வேளை மூதூர் கங்குவேலி குளத்தை ஆக்கிரமித்து அந்தக் குளத்தை நம்பி விவசாயம் செய்கின்ற தமிழ் முஸ்லிம் மக்களுடைய விவசாய செய்கையை குழப்பும் நோக்கில் குளத்தில் காணப்பட்ட நீரை வெளியேற்றி குளத்துக்குள்ளேயே வேற்று இனத்தவர்கள் வருகை தந்து விவசாயம் செய்து வருகின்றனர்.

இது தொடர்பில் பல முறைப்பாடுகள் எழுத்து மூலமாக கொடுக்கப்பட்டிருந்தும் எதுவித நடவடிக்கை எடுக்கவில்லை. நீர்ப்பாசன அதிகாரிகளிடம் முறையிடுமாறு பொலிஸார் கூறுவதாகவும் அவர்களிடத்தில் முறையிட்டும் எதுவித நடவடிக்கையை எடுக்கவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் நீண்ட நாட்களாக திருகோணமலை மாவட்டத்தை ஒரு பௌத்த மாவட்டமாக மாற்றுகின்ற நீண்ட கால திட்டம் இப்பொழுது துரித கதியில் அமுல் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

விஷேடமாக குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 30 க்கும் மேற்பட்ட புத்தர் சிலைகளும் வணக்கஸ்தலங்களும் உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

இதில் 23 இடங்களில் வேலைகள் இடம்பெற்று வருகின்றது. பௌத்த மக்கள் வாழாத இடத்தில் கூட புத்தர் சிலைகளை நிர்ணயிக்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேவேளை கிழக்கு ஆளுநர் தடை விதித்தாலும் கூட பாதுகாப்பு பிரிவின் அனுசரணையுடன் கற்று நிர்மான வேலைகள் இடம் பெற்று வருவதாகவும் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
ஜனவரி முதல் நீர்க்கட்டண சூத்திரம் அறிமுகம்; அமைச்சர் ஜீவன் தொண்டமான்!

ஜனவரி முதல் நீர்க்கட்டண சூத்திரம் அறிமுகம்; அமைச்சர் ஜீவன் தொண்டமான்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு