நீதிபதிகளின் ஓய்வூதிய வயதை நீடிப்பது தொடர்பான தீர்மானத்துக்கு அரசியலமைப்பின்படி சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்றைய (28) அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், இந்த விடயத்தில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என அரசியலமைப்பில் எந்த விதமான ஏற்பாடும் இல்லை என்று குறிப்பிட்டார்.
எனவே, நீதிபதிகளின் ஓய்வூதிய வயதை நீடிக்கும் முடிவை நடைமுறைப்படுத்த சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ வலியுறுத்தினார்.








