Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாவட்ட செயலத்தில் ஊடக துறை அபிவிருத்தி திட்டம் தொடர்பில் விஷேட கலந்துரையாடல்!

மட்டக்களப்பு மாவட்ட செயலத்தில் ஊடக துறை அபிவிருத்தி திட்டம் தொடர்பில் விஷேட கலந்துரையாடல்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு இணங்க, வெகுசன ஊடக அமைச்சு, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்துடன் இணைந்து உருவாக்குவது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு இணங்க, வெகுசன ஊடக அமைச்சு, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்துடன் இணைந்து இலங்கையில் தேசிய ஊடகக் கொள்கைக்கான கட்டமைப்பொன்றை உருவாக்கும் பணியிலும் இலங்கை ஊடகத்துறைக்கான கொள்கை சட்டமொன்றை அமைப்பதிலும் ஈடுபட்டுவருகின்றது.

அதற்கமைய, வெகுசன ஊடக அமைச்சினால் கல்வியாளர்கள் மற்றும் ஊடகத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை உள்ளடக்கி வழிநடத்தல் குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு பல சந்தர்ப்பங்களில் கூடி விசேட குழுக் கலந்துரையாடல்கள் மூலம் தேசிய ஊடகக் கொள்கையை உருவாக்கும் செயல்முறையில் அனைத்து பங்குதாரர்கள் மற்றும் ஆர்வமுள்ள தரப்பினரிடமிருந்து கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளது.

அதற்கமைவாக வெகுசன ஊடக அமைச்சின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த ஊடகவியலாளர்களுடனான விசேட கலந்துரையாடலொன்று இன்று (26) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் டீ.எல்.யூ.பீரீஸ் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் மொழி மற்றும் தொடர்பாடல் கற்கைகள் துறைத்தலைவர் கலாநிதி வி.ஜே.நவீன்ராஜ், கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.சிவபிரியா, வெகுஜன ஊடக அமைச்சின் பணிப்பாளர் (அபிவிருத்தி) டபிள்யூ.பீ.செவ்வந்தி, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும் இலங்கை பத்திரிகை பேரவையின் தலைவருமாகிய மஹிந்த பத்திரன, மட்டக்களப்பு மாவட்ட ஊடகப்பிரிவின் பொறுப்பதிகாரி வ.ஜீவானந்தன், வெகுசன ஊடக அமைச்சின் உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் ஊடகம்சார் விசேட நிபுணர் சதுரங்க அப்புவாராச்சி, உயரதிகாரிகள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு இணங்க, வெகுசன ஊடக அமைச்சினால் இலங்கையில் தேசிய ஊடகக் கொள்கைக்கான கட்டமைப்பொன்றை உருவாக்கும் பணியிலும் இலங்கை ஊடகத்துறைக்கான கொள்கை சட்டமொன்றை அமைப்பதிலும் ஈடுபட்டுவருகின்றமைக்கான காரணம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சினால் கல்வியாளர்கள் மற்றும் ஊடகத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை உள்ளடக்கி வழிநடத்தல் குழுவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் ஊடகவியலாளர்களுக்கு இதன்போது விரிவாக தெளிவுபடுத்தப்பட்டது.

அத்தோடு இவ்வாறான ஒரு கொள்கை சட்டமொன்றை உருவாக்கி அதனை அமுல்படுத்தி நடைமுறைப்படுத்தும் போது ஊடகவியலாளர்கள் எந்தவகையிலும் பாதிக்கப்படாத வண்ணம் அது அமைய வேண்டும் என்றும் அவ்வாறான சட்டமொன்றை உருவாக்கும்போது கட்டாயமாக சேர்த்துக்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும், வழிநடத்தல் குழு ஸ்தாபிக்கும்போது அக்குழுவில் கட்டாயமாக மாவட்ட ரீதியில் சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டுமெனவும் இதன்போது ஊடகவியலாளர்களிடமிருந்து கருத்துக்கள் பரிமாறப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் கல்வியியலாளர்கள், வெகுசன ஊடக நிறுவன பிரதிநிதிகள், உரிமைசார் அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

இந்தோனேசியாவில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கையில் 13 பேர் பலி
செய்திகள்

இந்தோனேசியாவில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கையில் 13 பேர் பலி

May 14, 2025
11,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நிசான்
உலக செய்திகள்

11,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நிசான்

May 13, 2025
கெரண்டிஎல்ல விபத்தில் மீட்கப்பட்ட பொருட்களை அடையாளத்தை உறுதிப்படுத்தி பெற்றுக்கொள்ளலாம்
செய்திகள்

கெரண்டிஎல்ல விபத்தில் மீட்கப்பட்ட பொருட்களை அடையாளத்தை உறுதிப்படுத்தி பெற்றுக்கொள்ளலாம்

May 13, 2025
கொழும்பு மாநகரசபை யாருக்கு?- ரில்வின் சில்வா எதிர்க்கட்சிகளுக்கு எச்சரிக்கை
அரசியல்

கொழும்பு மாநகரசபை யாருக்கு?- ரில்வின் சில்வா எதிர்க்கட்சிகளுக்கு எச்சரிக்கை

May 13, 2025
போரை நிறுத்தியது நான்தான் என்ற ட்ரம்பின் கருத்தை மறுத்தது இந்தியா
உலக செய்திகள்

போரை நிறுத்தியது நான்தான் என்ற ட்ரம்பின் கருத்தை மறுத்தது இந்தியா

May 13, 2025
வடமராட்சி கிழக்கில் தொடரும் மணல் கொள்ளை
செய்திகள்

வடமராட்சி கிழக்கில் தொடரும் மணல் கொள்ளை

May 13, 2025
Next Post
ஆசிரியர் – அதிபர் ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸாரின் தாக்குதல்; கவலை தெரிவித்த கல்வி அமைச்சர்!

ஆசிரியர் – அதிபர் ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸாரின் தாக்குதல்; கவலை தெரிவித்த கல்வி அமைச்சர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.