Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடக்கு ஆளுநருக்கு ஜனாதிபதி வழங்கிய பதவி!

கால்நடைகளை பராமரிக்க விரும்புவோர் வடக்கு ஆளுநரை தொடர்பு கொள்ளவும்!

3 years ago
in செய்திகள்

வடக்கு மாகாணத்தில் உரிமையாளர்களால் கைவிடப்பட்ட கால்நடைகளை பராமரிப்பதற்கான காணிகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் கால் நடைகளை பராமரிக்க விரும்புவோர் ஆளுநர் செயலகத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என்று வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், உரிமையாளர்களால் கைவிடப்பட்ட கால்நடைகளை பராமரிப்பதற்கு ஏற்ற இடங்களை தெரிவு செய்யுமாறு கேட்டதற்கு இணங்க 22 பிரதேச செயலகங்களில் அதற்கான இடங்களை தெரிவு செய்து அனுப்பி உள்ளார்கள். யுத்த நிலைமை முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட காலம் முதல் இன்று வரை கால்நடைகள், குறிப்பாக மாடுகள் பெருமளவில் உரிமையாளர்களால் கைவிடப்பட்டு
கட்டாக்காலிகளாக பொது இடங்களில் அலைந்து திரிகின்றன.

இவ்வாறான கால்நடைகள் வீதிகளில் விபத்துக்கு உள்ளாகி இறப்பதும் நோய்வாய்ப்பட்டுச்
சிகிச்சை இன்றி மரணிப்பது மட்டுமின்றி, விவசாய மற்றும் பயிரச்செய்கை நிலங்களில் பயிர்களை நாசமாக்கி விவசாயிகளுக்குப் பொருளாதாரப் பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகின்றன. சில சந்தர்ப்பங்களில் இவ்வாறான கால்நடைகள் திருடப்பட்டு வயது, பால் வித்தியாசம் இன்றி இறைச்சிக்காக வெட்டப்படும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றமை மிகுந்த கவலைக்குரியது.

மனிதாபிமான சிந்தனையில் கைவிடப்பட்ட கால்நடைகள் உள்ளிட்ட சகல பிராணி களுக்குமான நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அவற்றுக்கு உரிய முறையில் உணவளிக்கவும். நோய் மற்றும் பிற இயற்கை அனர்த்தம் உள்ளிட்ட காரணிகளால் இந்த விலங்குகள் பாதிப்படைவதைத் தடுப்பதற்கான செயன்முறை ஒன்று உருவாக்கப்படல் வேண்டும். இந்தக் கருத்துக்கு அமைய கால்நடைகளுக்கான பாதுகாப்பான காப்பகங்களைத் தேவைக்கேற்ப வட மாகாணம் எங்கும் அமைத்துப் பராமரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஆகவே, மேற்படி கால்நடைகளுக்கான காப்பகங்களை விரும்பிய பகுதிகளில் அமைத்துப் பராமரிக்க விரும்பும் சமய ஸ்தாபனங்கள், தொண்டு நிறுவனங்கள்.

அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் மிருக வதைக்கு எதிரான இயக்கங்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துடன் தொடர்பு கொண்டு தமது விருப்பத்தை கடிதம் மூலம் தெரிவிக்க முடியும் – என்றார்.

தொடர்புடையசெய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
Next Post
மாவட்டத்தில் ஒரு நகரத்தை அபிவிருத்தி செய்யத் திட்டம்; நகர அபிவிருத்தி அமைச்சு அறிவிப்பு!

மாவட்டத்தில் ஒரு நகரத்தை அபிவிருத்தி செய்யத் திட்டம்; நகர அபிவிருத்தி அமைச்சு அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு