நகர அபிவிருத்தி அதிகார சபை தனியார் துறையின் பங்களிப்புடன் தனது வருமானத்தை கவனமாக நிர்வகித்து, நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு நகரத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்துக்கு அரசாங் கத்தின் நிதி பயன்படுத்தப்படாது என்றும், ஒழுங்கமைக்கப்படாத நகர்ப்புற அபிவிருத்தி நேரடியாகவும் மறைமுகமாக வும் ஒரு நாட்டின் அபிவிருத்தியை பாதிக்கிறது என்றார். எனவே, நாட்டின் அனைத்து நகரங்களையும் விரைவாக மேம்படுத்துவதற் கான அரச திட்டத்தை செயல்படுத்தும் பெரும் பொறுப்பு நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் ஒப்படைக் கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தின் கீழ் நாடு முழுவதும் 100 நகரங்களை அபிவிருத்தி செய்வதற்கான தேசிய வேலைத் திட்டம் 2020இல் ஆரம்பிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், 100 பின்தங்கிய நகரங்கள் கண்டறியப்பட்டு, ஒவ்வொரு நகரத்தையும் அழகுபடுத்துவதற்காக அவற்றின் அடிப்படை வசதிகள் மற்றும் பொருத்த மான உள்கட்டமைப்புகளை மேம்படுத்தியது.
இதன்படி, நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய 116 நகரங்கள் இந்தத் திட்டத்தை ஆரம்பகட்டத்தில் தொடங்குவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டன. ஒவ்வொரு நகரத்தின் அபிவிருத்திக்கும் 20 மில்லியன் ரூபாய் பயன்படுத்தப்பட்டது.தற்போது இந்த 116 நகரங்களின் பணிகள் நிறைவடைந்துள்ளன மற்றும் அடிப்படை பொதுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நடைபாதைகள், வடிகால் அமைப்புகள், பயணிகள் தங்குமிடங்கள் மற்றும் சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட் டுள்ளன – என்றும் தெரிவிக்கப்பட்டது.