இலங்கையின் அடுத்த ஜனாதிபதி பதவியை பெற்றுக்கொள்ள பாடுபடுவேன் எனவும் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க கூறுகிறார்.
நாட்டில் நிலவும் அனைத்து பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், அதற்காகவே இந்த பதவியை பெற முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இணைய சேவை ஒன்றுக்கு வழங்கிய கலந்துரையாடலில், தான் நிச்சயம் ஜனாதிபதியாக வருவேன் எனவும், தன்னை யாராலும் தடுக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு மதத் தலைவர்கள் மற்றும் செல்வாக்கு குழுக்களின் ஆசீர்வாதம் ஏற்கனவே கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மே மாதம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து ஜனக ரத்நாயக்க நீக்கப்பட்டார். இதற்கு நாடாளுமன்றில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தன.
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் எடுத்த தீர்மானம் தொடர்பில் அமைச்சர்களுக்கும் ஜனக ரத்நாயக்கவுக்கும் இடையில் பல சந்தர்ப்பங்களில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.