Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆளுமை விருத்திக்கான விசேட செயற்திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட கழகங்களின் அங்குரார்ப்பண நிகழ்வு!

ஆளுமை விருத்திக்கான விசேட செயற்திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட கழகங்களின் அங்குரார்ப்பண நிகழ்வு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு கிரான் பழைய மாணவர் அமைப்பு மட் /ககு/ கிரான் மத்திய கல்லூரியுடன் இணைந்து நடைமுறைப்படுத்தும் ஆளுமை விருத்திக்கான விசேட செயற்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 24 கழகங்களில் மாணவர் மென்திறன் கழகம், இளம் கண்டுபிடிப்பாளர் கழகம், மற்றும் ஊடக கழகம் என்பவை கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் திரு.எ .கனகசிங்கம் அவர்களினால் உத்தியோகபூர்வமாக நேற்று (31.10.2023) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இலங்கையின் வரலாற்றில் முதல் முதலாக பாடசாலை மட்டத்தில் மாணவர் மென்திறன் கழகம் கிரான் மத்திய கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி நிகழ்வானது அதிபர் திரு. மா. தவராஜா அவர்களின் தலைமையில் பழைய மாணவர் அமைப்பின் தலைவர் திரு. சீ. சுகிதரன் அவர்களின் வரவேற்பு மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளர் திரு. பூ. வரதராஜன் அவர்களின் நன்றியுரையுடன் நடந்தேறியது.

இந் நிகழ்வில் கோறளைபற்று தெற்கு பிரதேச செயலாளர் திரு. S.ராஜ்பாபு, கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் வைத்திய கலாநிதி திரு.க. அருளானந்தம், கல்குடா பிரதி கல்விப்பணிப்பாளர் திரு.கே.ஜெயவதனன், கணபதி பூஜா துரந்தரர் சிவஸ்ரீ.மு.சண்முகம், கிரான் மெதடிஸ்த திருச்சபையின் அருட்திரு. வே.உதயகுமார், மட்/ககு/கிரான் புதுக்கொலனி சிவவித்தியாலய அதிபர் திரு. T.தமிழ்வாணன். மட்/ககு/ கிரான் விவேகானந்தா வித்தியாலய அதிபர் திருமதி. சுமித்ரா விஜியானந்தம் மற்றும் கிரான் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் போது கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் திரு.எ.கனகசிங்கம். பழைய மாணவர் அமைப்பு கிரான் மத்திய கல்லூரியுடன் இணைந்து கல்லூரியில் நடைமுறைப்படுத்தும் ஆளுமை விருத்திக்கான விசேட செயற்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 24 மாணவர் மன்றங்கள் தொடர்பான செயற்திட்டத்தில் கிழக்கு பல்கலைக்கழகம் இணைந்து செயற்படவுள்ளமையினை உத்தியோகபூர்வமாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கல்லூரியின் இணைப்பாசிரியர்கள், பழைய மாணவர் அமைப்பின் நிருவாக சபை உறுப்பினர்கள், வகுப்பு இணைப்பாளர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்களும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.

தொடர்புடையசெய்திகள்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்
செய்திகள்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்

September 13, 2026
அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்
செய்திகள்

அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்

September 13, 2026
அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு
செய்திகள்

அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு

September 13, 2026
ஞானசார தேரர் தலைமறைவு?;  மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி
செய்திகள்

ஞானசார தேரர் தலைமறைவு?; மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி

September 13, 2026
ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்
உலக செய்திகள்

ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்

September 13, 2026
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்

September 13, 2026
Next Post
யூதர்களுக்கு அச்சுறுத்தல்; நியூயார்கில் மாணவர் ஒருவர் கைது!

யூதர்களுக்கு அச்சுறுத்தல்; நியூயார்கில் மாணவர் ஒருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு