பாடசாலை மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் அம்பலாங்கொட கொடஹேன கனிது கல்லூரியின் முன்னாள் அதிபருக்கு 30 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்த பலப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க, துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறு நேற்று (30) உத்தரவிட்டுள்ளார்.
அம்பலாங்கொட கொடஹேன கனிது கல்லூரியின் அதிபராக இருந்த ஆர்.எம்.மார்வின் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதன் காரணமாக அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2004 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஒக்டோபர் மாதங்களுக்கு இடையில் பாடசாலையில் கல்வி கற்கும் 16 வயதுக்குட்பட்ட சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்தமைக்காக பிரதிவாதிக்கு எதிராக சட்டமா அதிபர் 03 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்தார்.
இது தொடர்பான நீண்ட விசாரணையின் முடிவில், குற்றம்சாட்டப்பட்டவர் மீதான குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி அரசுத் தரப்பு நிரூபித்துள்ளதாக முடிவு செய்யப்பட்டது.
ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 10 வருடங்கள் வீதம் 30 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்த நீதிபதி, தண்டனையை 10 வருட காலத்திற்குள் அனுபவிக்க உத்தரவிட்டார்.