வவுனியாவில் உருகுலைந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் நெளுக்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட தம்பனை புளியங்குளம் பகுதியில் உள்ள குளக்கரைக்கு அண்மையில் நேற்று (01) காலை மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தெரிவிக்கையில், “சடலத்திற்கு அருகேயுள்ள வயல் வெளியில் சேட் ஒன்று காணப்பட்டது.
குறித்த நபர் உயிரிழந்து ஐந்து தொடக்கம் பத்து நாட்கள் வரை இருக்கலாம். சடலம் உருகுலைந்த நிலையில் காணப்படுவதால் ஆண் நபரா அல்லது பெண் நபரா என்பதை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.” என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சடலத்தை அடையாளம் காண பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.