Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்முனை பிராந்தியத்துக்கான மருத்துவ ஆய்வுகூடம் திறந்துவைப்பு!

கல்முனை பிராந்தியத்துக்கான மருத்துவ ஆய்வுகூடம் திறந்துவைப்பு!

3 years ago
in செய்திகள்

கல்முனை பிராந்தியத்துக்கான மருத்துவ ஆய்வுகூடம் பாலமுனை பிரதேச வைத்தியசாலை கட்டிடத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இத்திறப்பு விழா நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதரன் பிரதம அதிதியாகவும், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் மெலிண்டன் கொஸ்தா கௌரவ அதிதியாகவும், முன்னாள் பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளரும், நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான டொக்டர் எம்.பீ.அப்துல் வாஜித் விசேட அதிதியாகவும் கலந்துகொண்டு ஆய்வுகூடத்தினை திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் பிராந்திய திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், உயிரியல் மருத்துவ பொறியியலாளர் இப்ஹாம், பாலமுனை பிரதேச வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஜே.நௌபல், கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையின் பிரிவுத் தலைவர்கள், வைத்தியர்கள், பிராந்திய ஆய்வு கூட மேற்பார்வையாளர் ஏ எம் எம் சலீம், சுகாதார உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

மிகவும் குறைந்தளவிலான நிதியினைக்கொண்டும் பிராந்திய சுகாதார நிறுவனங்களில் உள்ள வளங்களைக் கொண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த பிராந்திய ஆய்வுகூடத்தில் பிராந்திய வைத்தியசாலைகளில் எடுக்கப்படுகின்ற நோயாளர்களின் குருதி மற்றும் மாதிரிகள் பரிசோதனை செய்யப்படவுள்ளதுடன், விசேட பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. இங்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் முடிவு அறிக்கைகள் உரிய நேரத்துக்குள் சம்மந்தப்பட்டவர்களுக்கு Online (email, whatsapp) மற்றும் குறுஞ்செய்தி ஊடாகவும் அனுப்பி வைக்கப்படவுள்ளது. மேலும் இந்த ஆய்வுகூடத்தின் ஊடாக பிராந்திய மக்கள் பெரிதும் நன்மையடைவார்கள் என நம்பப்படுகிறது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரச நிதி செலவீனங்களை குறைத்து கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்ட குறித்த வேலைத்திட்டம் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளினதும் வரவேற்பினைப் பெற்றுள்ளதுடன் அதனை செயற்படுத்துவதற்கான அங்கீகாரமும் கிடைத்துள்ளமை விசேட அம்சமாகும்.

இலங்கையில் முதலாவது பிராந்திய ஆய்வுகூடத்தினை கல்முனை பிராந்தியத்திலே திறந்து வைத்ததன் மூலம் தேசிய ரீதியில் கல்முனை சுகாதார சேவைகள் பணிமனை முக்கியத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

தமிழர் அரசியல் பேரவையில் இணையுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ரவூப் ஹக்கீம் அழைப்பு
அரசியல்

தமிழர் அரசியல் பேரவையில் இணையுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ரவூப் ஹக்கீம் அழைப்பு

August 9, 2026
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்

August 9, 2026
சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
செய்திகள்

சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

August 9, 2026
போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது
செய்திகள்

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது

August 9, 2026
கிளிநொச்சி வங்கியில் போலி பணத்தை வைப்பிலிட வந்தவர்கள் கைது
செய்திகள்

கிளிநொச்சி வங்கியில் போலி பணத்தை வைப்பிலிட வந்தவர்கள் கைது

August 9, 2026
யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
செய்திகள்

யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

August 9, 2026
Next Post
சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலயத்திற்கு கணனித்தொகுதிகள் அன்பளிப்பு!

சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலயத்திற்கு கணனித்தொகுதிகள் அன்பளிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு