இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பௌத்த உறவுகளை மேம்படுத்துவதற்காக இந்திய அரசாங்கம் 15 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையில் இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பின் போது இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான இருதரப்பு ஆவணங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
இந்த நிகழ்வில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் இந்திய பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
அதேசமயம் 2020 ஆண்டு பௌத்த உறவு மேம்பாட்டுக்காக இலங்கைக்கு ஒரு கோடியே 50 இலட்சம் டொலர்களை இதற்கு முன்னரும் நன்கொடையாக இந்தியா வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.