Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஐ.பி.எல் முதல் போட்டியிலேயே 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

ஐ.பி.எல் முதல் போட்டியிலேயே 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

3 years ago
in விளையாட்டு

ஐபிஎல் 16ஆவது சீசனின் முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு சாம்பியன் குஜராத் டைடன்ஸ் ஆகிய அணிகள் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைடன்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணியில் ஓபனர் ருதுராஜ் கெய்க்வாட் 50 பந்துகளில் 4 பவுண்டரி, 9 சிக்ஸர்கள் உட்பட 92 ரன்களை குவித்து அசத்தினார். அடுத்து, மொயின் அலி 23 (17), ஷிவம் துபே 19 (18), மகேந்திரசிங் தோனி 14 (7) ஆகியோரும் அதிரடியாக விளையாடியதால், சிஎஸ்கே 20 ஓவர்கள் முடிவில் 178/7 ரன்களை சேர்த்து அசத்தியது.

இலக்கை துரத்திக் களமிறங்கிய குஜராத் டைடன்ஸ் அணியில் ஷுப்மன் கில் 63 (36), விருத்திமான் சாஹா 25 (16), சாய் சுதர்சன் 22 (17), விஜய் சங்கர் 27 (21) ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். இறுதிக் கட்டத்தில் ராகுல் தேவத்தியா 15 (14), ரஷித் கான் 10 (3) ஆகியோர் சிறப்பாக விளையாடியதால், குஜராத் அணி 19.2 ஓவர்களில் 182/5 ரன்களை சேர்த்து, 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.

இப்போட்டியில் வெற்றியை பெற்றப் பிறகு ஹார்திக் பாண்டியா பேட்டிகொடுத்தார். அதில், ”கடைசி கட்டத்தில் எங்களுக்கு பெரிய நெருக்கடி இருந்தது. நல்லவேளை ராகுல் தேவத்தியா, ரஷித் கான் இருவரும் சிறப்பாக செயல்பட்டு, வெற்றியைப் பெற்றுக்கொடுத்துவிட்டனர். சிஎஸ்கே 200 ரன்களை அடிக்கும் நிலை இருந்தபோது, எங்கள் அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு அடுத்தடுத்து விக்கெட்களை வீழ்த்தி, சிஎஸ்கேவை கட்டுப்படுத்தினார்கள்” எனக் கூறினார்.

மேலும் பேசிய அவர், ”கடினமான லெந்தில் பந்துவீசினால், நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் எனக் கருதினேன். ஆகையால்தான், அல்ஜாரி ஜோசப்புக்கு கடைசி நேரத்தில், ஓவர்களை வழங்கி சிஎஸ்கேவை நெருக்கடியில் தள்ளினோம். ரஷித் கான் பந்துவீச்சில் மட்டுமல்ல, பேட்டிங்கிலும் அதிரடியாக செயல்பட்டு அசத்தினார். வெற்றிப் பயணத்தை தொடருவோம்” என ஹார்திக் நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

இலங்கை வந்தடைந்தத பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி!
செய்திகள்

இலங்கை வந்தடைந்தத பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி!

July 21, 2026
23-வது பிஃபா உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய ஸ்பெயின்!
உலக செய்திகள்

23-வது பிஃபா உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய ஸ்பெயின்!

July 20, 2026
LPL ஜாப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் கைது!
செய்திகள்

LPL ஜாப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் கைது!

July 17, 2026
உலகக்கிண்ணத்தில் ‘தங்க காலணி’ விருதுக்கான போட்டி விறுவிறுப்பு!
செய்திகள்

உலகக்கிண்ணத்தில் ‘தங்க காலணி’ விருதுக்கான போட்டி விறுவிறுப்பு!

July 13, 2026
“இதே எனது கடைசி உலகக் கோப்பை”; உணர்ச்சிபூர்வமாக அறிவித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!
உலக செய்திகள்

“இதே எனது கடைசி உலகக் கோப்பை”; உணர்ச்சிபூர்வமாக அறிவித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

July 6, 2026
உலகக் கிண்ண கால்பந்து; ஜப்பான்–சுவீடன் போட்டி சமநிலை!
செய்திகள்

உலகக் கிண்ண கால்பந்து; ஜப்பான்–சுவீடன் போட்டி சமநிலை!

June 26, 2026
Next Post
நண்பனுடன் சேர்ந்து தந்தையை வெட்டிக்கொன்ற மகன்கள்;தமிழர் பகுதியில் சம்பவம்!

நண்பனுடன் சேர்ந்து தந்தையை வெட்டிக்கொன்ற மகன்கள்;தமிழர் பகுதியில் சம்பவம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு