Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உண்மையைக் கண்டறிவதில் அரசாங்கம் ஏன் அக்கறை காட்டுவதாக இல்லை? ; சஜித் கேள்வி!

போரை முடிவுக்கு கொண்டுவந்ததாக கூறி நாட்டுக்கு முடிவு கட்டிய ராஜபக்ச குடும்பம்; சஜித் குற்றச்சாட்டு!

3 years ago
in செய்திகள்

“போரை முடிவுக்கு கொண்டுவந்தோம், போரை முடிவுக்கு கொண்டுவந்தோம் எனக் கூவி கூவியே தேசிய
வளங்களை ஒரு குடும்பம் (ராஜபக்ச குடும்பம்) அபகரித்துள்ளது. யுத்தம் முடிந்தால் நாடு இன்னும்
சுதந்திரம் அடைய வில்லை.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அத்துடன், நாட்டை அழித்த ராஜபக்சக்களை தான் பாதுகாக்கப்போவதில்லை எனவும், அவர்களுக்கு எதிராக நாட்டின் சட்டம் அமுல்படுத்தப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட பணம் நாட்டுக்கு மீள கொண்டுவரப்படும் எனவும் சஜித் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு 3 ஆவது முறையாக மின் கட்டணத்தை அதிகரித்து இந்நாட்டிலுள்ள இலட்சக்கணக்கான மின் பாவனையாளர்களை நெருக்கடிக் குள் தள்ளியுள்ளது. இந்நிலையில் பெறுமதி சேர் வரி 18 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது ஓர் பிற்போக்குத் தனமான வரி விதிப்பாகும்.கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக் கும் நபர்களிடமிருந்து முறையாக வரி அறவிடப்பட வேண்டும் ,வரி செலுத்தா தோரிடமிருந்தும் முறையாக வரி அறவிடப்பட வேண்டும் ,ஊழல் முறைகளில் அரச சார்பு நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் தேவையற்ற வரிச் சலுகைகளும் நீக்கப்பட வேண்டும் , இம் முறைகள் மூலம் வற் வரியை அதிகரிக்காமல் அரசின் வருவாயை அதிகரிக்க முடியும்.யுத்த வெற்றி என்ற பெயரிலும் , தேசப்பற்று என்ற போர்வையிலும் மக்களின் தேசிய வளங்களை ஒரு குடும்பம் எவ்வாறு அபகரித்தது என்பது தெரிய வேண்டும் ,யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் முழுமையான சுதந்தி ரம் வழங்கப்படவில்லை , நாட்டின் வளங்களை இவர்கள் எவ்வாறு திருடினார்கள் என்பதை பண்டோரா பத்திரங்கள் வெளிப்படுத்தின.

நாட்டை அழித்த ராஜபக்சவுக்கு நான் துணைபோகமாட்டேன் என்பதால் அவர்களுக்கு எதிராக நாட்டின்
சட்டம் அமுல்படுத்தப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை நாட்டுக்கு திருப்பிப் பெறுவோம்.” – என்றார்.

தொடர்புடையசெய்திகள்

பல்கலை பகிடிவதைகளுக்கு எதிராக நடவடிக்கை
செய்திகள்

பல்கலை பகிடிவதைகளுக்கு எதிராக நடவடிக்கை

September 17, 2026
மட்டக்குளி கோர விபத்து; கார் சாரதி கஞ்சா உட்கொண்டிருந்தமை உறுதி!
செய்திகள்

மட்டக்குளி கோர விபத்து; கார் சாரதி கஞ்சா உட்கொண்டிருந்தமை உறுதி!

September 17, 2026
அவுஸ்திரேலியா செல்லும் சர்வதேச மாணவர்களின் குடும்பத்தினருக்கான விசா விதிகளில் கட்டுப்பாடு!
உலக செய்திகள்

அவுஸ்திரேலியா செல்லும் சர்வதேச மாணவர்களின் குடும்பத்தினருக்கான விசா விதிகளில் கட்டுப்பாடு!

September 17, 2026
நீதிபதிகளின் சம்பளத்திலும் வரி அறவிடலாம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

நீதிபதிகளின் சம்பளத்திலும் வரி அறவிடலாம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு

September 17, 2026
சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாவிட்டால் ஆயுதங்களை இளைஞர்களிடம் கையளியுங்கள்;  ரவிகரன்
செய்திகள்

சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாவிட்டால் ஆயுதங்களை இளைஞர்களிடம் கையளியுங்கள்; ரவிகரன்

September 17, 2026
மட்டு நகர் புறத்திலுள்ள பூச்சட்டிகளை சேதப்படுத்தும் நபர்கள்
காணொளிகள்

மட்டு நகர் புறத்திலுள்ள பூச்சட்டிகளை சேதப்படுத்தும் நபர்கள்

September 17, 2026
Next Post
கோட்டாவின் ஆட்சி கவிழ்ந்ததற்கு பின்னால் இந்தியாவின் “றோ” !

கோட்டாவின் ஆட்சி கவிழ்ந்ததற்கு பின்னால் இந்தியாவின் "றோ" !

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.