Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கோட்டாவின் ஆட்சி கவிழ்ந்ததற்கு பின்னால் இந்தியாவின் “றோ” !

கோட்டாவின் ஆட்சி கவிழ்ந்ததற்கு பின்னால் இந்தியாவின் “றோ” !

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை விரட்டிவிட்டு ரணில் விக்கிரமசிங்கவை ஆட்சிக்கு கொண்டுவந்ததன் பின்னணியில் இந்தியா செயற்பட்டுள்ளது என்று பரபரப்பான தொரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர்கலாநிதி வசந்த பண்டார ‘அறகலயவின்’ பின்னணியில் இந்தியாவின் றோவும்,
அமெரிக்காவின் சி.ஐ.ஏயுமே செயற்பட்டன எனவும் அவர் கூறினார்.

சிங்கள இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இந்த குற்றச்சாட்டை
முன்வைத்தார்.இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,“இலங்கையில் நெருக்கடி ஏற்பட்டிருந்தவேளைகளில் இந்தியா உதவி இருந்தாலும், அதன்மூலம் தனக்கு உபாயமார்க்கமாக தேவையானவற்றை அந்நாடு பெற்றுக் கொண்டுள்ளது என்பதே உண்மை.

தமது நாட்டு இராணுவத்தை இலங்கைக்கு அனுப்புவதற்காக இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை இந்தியா பயன்படுத்திக்கொண்டது. பண்டைய காலத்தில் 17 தடவைகள் இலங்கையை இந்திய ஆட்சியாளர்கள் ஆக்கிரமித்துள்ளனர். அந்த 17 சந்தர்ப்பங்களிலும் போரிட்டு இழந்ததை இலங்கையர்கள் மீளப்பெற்றுள்ளனர். எனவே இலங்கையை காலனித்துவ நாடாக வைத்திருப்பது இலகுவான காரியம்
அல்ல என்பது இந்தியர்களுக்கு தெரியும்.

கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சி வீழ்வதற்கு இந்தியா உதவி வழங்கியது என்பது உறுதி. ஊர் பகுதிகளில் வட்டி வியாபாரிபோல் பொருளாதாரத்தை விழ வைத்தே இந்தியா உதவி செய்தது. கோட்டாபய ராஜபக்ஷவை வெளியேற்றி விட்டு ,ரணிலை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு இந்தியா தலையிட்டதற்கான சாட்சிகள் உள்ளன.

இந்தியாவும், அமெரிக்காவும் ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் தான் செயற்படுகின்றன. ‘குவாட்’
அமைப்பின் தேவைதான் கோட்டாவை விரட்டிவிட்டு, ரணிலை கொண்டுவருவது. அதனைதான் இந்தியா செயற்படுத்தியுள்ளது. தனது தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கு ரணில் தான் பொருத்தமான நபர் என்பது இந்தியாவுக்கு தெரியும். ரணிலை இந்தியா விரும்பவில்லை என்பதெல்லாம் இந்த கேமின் ஓர் அங்கமாகும். இலங்கையில் இடம்பெற்ற ‘அறகலய’கூட இந்திய, அமெரிக்கா வின் கூட்டு நிகழ்ச்சி நிரலாகும்.” – என்றார்.

தொடர்புடையசெய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
Next Post
சரிகமப இசை நிகழ்ச்சியில் இலங்கை குயில்களுக்கு வழங்கப்பட்ட பரிசு!

சரிகமப இசை நிகழ்ச்சியில் இலங்கை குயில்களுக்கு வழங்கப்பட்ட பரிசு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு