2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதின.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 279 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக சரித் அசலன்க 108 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இவர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பெற்ற இரண்டாவது சதம் இதுவாகும்.
பந்துவீச்சில், பங்களாதேஷ் அணியின் தன்சிம் ஹசன் சாகிப் 80 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், ஷகிப் அல் ஹசன் 57 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இந்தநிலையில், 280 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 41.1 ஓவர்களில் 07 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அணிசார்பில், அதிகபடியாக நஜ்முல் ஹொசைன் சாண்டோ 90 ஓட்டங்களையும், ஷகிப் அல் ஹசன் 82 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில், இலங்கை அணியின் தில்ஷான் மதுஷங்க 69 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.