மின் கட்டணம் செலுத்த முடியாத 788,235 பாவனையாளர்களுக்கான மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியால் மின்கட்டண அதிகரிப்பு, வரி அதிகரிப்பு, ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி உள்ளிட்ட வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரண மாக மின்கட்டணம் செலுத்துவது தற்போது சவாலான விடயமாககாணப்படுகிறது.இவ்வாறானதொரு பின்னணியில் இந்த ஆண்டு, அரசாங்கம் மூன்று முறை மின் கட்டணத்தை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், கடந்த ஓகஸ்ட் மாதத்தில் அதிகளவான மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.குறித்த எண்ணிக்கை 120,474 ஆக பதிவு செய்யப்பட்டுள்ள தாக அவர் குறிப்பிட்டார்.அத்துடன், கடந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் 118,481 பாவனையாளர்களின் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.இந்த நிலையில், கடந்த ஒக் ரோபர் மாதம் 106,106 பாவனையாளர்களின் மின் விநியோ கம் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது