Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஸ்டாலினின் வாழ்த்து காணொளியை புறக்கணித்து நடத்தப்பட்ட மலையக 200 நிகழ்வு!

ஸ்டாலினின் வாழ்த்து காணொளியை புறக்கணித்து நடத்தப்பட்ட மலையக 200 நிகழ்வு!

3 years ago
in செய்திகள்

இலங்கை மலையகத் தமிழர் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளிக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து மத்திய அரசுக்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் தென் தமிழகத்தில் இருந்த அப்பாவி மக்களை வலு கட்டாயமாக இந்தியாவில் இருந்து
இலங்கைக்கு நாடு கடத்தியது பிரிட்டிஷ் அரசு. அவர்கள் இலங்கை மலையகத் தமிழர்கள் என்ற பெயரில் அடையாளப்படுத்தப்பட்டார்கள். பிரிட்டிஷாரால் வலுக்கட்டாயமாக கொண்டு போகப்பட்டு இலங்கையில் குடியமர்த்தப்பட்ட மலையகத் தமிழர்கள் புலம்பெயர்ந்த 200 ஆவது ஆண்டு தற்போது நினைவுகூரப்படுகிறது.
“நாம் 200 ஒற்றுமை பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரியத்தின் முழக்கம்” என்ற பெயரில் மூன்று நாட்கள் நிகழ்ச்சிகள் நடந்தன.

இந்நிகழ்ச்சியை இலங்கை மலையக தமிழர்களுக்காக இலங்கையின் உள் நாட்டு தோட்ட தொழில் துறை
மற்றும் அரசு தொழில்துறை அமைச்சகம் முன்னெடுத்தது. இலங்கையில் உள்ள மலையக தமிழர்களின் உறவு பாலமாக இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் முன்னெடுத்த, இந்த நிகழ்ச்சியில் மலையக தமிழர்கள் அவர்களின் பூர்வீக தமிழ் பூமி சார்ந்த அரசியல் பிரதிநிதிகளாக தமிழ்நாட்டிலிருந்தும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.

இதில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இந்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். இலங்கை அரசின் பங்களிப்புடன் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமானால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க வேண்டும் என இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான்
வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதனை ஏற்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக மலைகத் தமிழர்களின் நாம் 200 விழாவிற்கு வாழ்த்துரை வழங்கி அனுப்பியிருந்தார்.முதல்வரின் உரை ஊடகங்கள் மற்றும் ஏடுகளுக்கும் அளிக்கப்பட்டிருந்தன. ஆனால் நவம்பர் 3 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற மேற்கண்ட
விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் காணொலி உரையை ஒளிபரப்பக்கூடாது
என்று மத்திய பாஜக அரசு தடை போட்டு விட்டது என இந்து ஆங்கில நாளேடு விரிவாக செய்தி வெளியிட்டு இருக்கிறது.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் இந்திய அரசின் சார்பில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். தமிழ்நாடு பாஜக தலைவரும் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஆனால் தொப்புள் கொடி உறவுகளான தமிழ்நாட்டு மக்களின் சார்பில் வாழ்த்துரை வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனுப்பிய காணொலி உரையை அந்த விழாவில் ஒளிபரப்ப தடை விதித்ததன் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலினை சிறுமைப்படுத்துவதற்கு முயன்றுள்ள மத்திய பாஜக அரசின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது கடும்
கண்டனத்துக்குரியது-எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; மதுபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் சாரதி கைது!
செய்திகள்

முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; மதுபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் சாரதி கைது!

August 1, 2026
முல்லைத்தீவு, கிளிநொச்சியில் காணி விடுவிப்புக்கு விரைவில் நடவடிக்கை; பாதுகாப்பு பிரதியமைச்சர் உறுதி!
செய்திகள்

முல்லைத்தீவு, கிளிநொச்சியில் காணி விடுவிப்புக்கு விரைவில் நடவடிக்கை; பாதுகாப்பு பிரதியமைச்சர் உறுதி!

August 1, 2026
ஈரானுக்கு எதிராக மேலும் தாக்குதல் நடத்தத் திட்டம்; டிரம்ப் எச்சரிக்கை!
உலக செய்திகள்

ஈரானுக்கு எதிராக மேலும் தாக்குதல் நடத்தத் திட்டம்; டிரம்ப் எச்சரிக்கை!

August 1, 2026
பொதுநலவாய விளையாட்டில் இலங்கைக்கு தங்கம்; ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க பத்திரகே வரலாற்றுச் சாதனை
செய்திகள்

பொதுநலவாய விளையாட்டில் இலங்கைக்கு தங்கம்; ஈட்டி எறிதலில் ருமேஷ் தரங்க பத்திரகே வரலாற்றுச் சாதனை

August 1, 2026
2025 உயர்தர பரீட்சையின் முடிவுகள்! பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!
செய்திகள்

2025 உயர்தர பரீட்சையின் முடிவுகள்! பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியீடு!

August 1, 2026
யாழ்ப்பாணம், கண்டி வரை விரியும் மெட்ரோ பேருந்து சேவை; ஆண்டிறுதிக்குள் 121 புதிய பேருந்துகள் இயக்கம்!
செய்திகள்

யாழ்ப்பாணம், கண்டி வரை விரியும் மெட்ரோ பேருந்து சேவை; ஆண்டிறுதிக்குள் 121 புதிய பேருந்துகள் இயக்கம்!

July 31, 2026
Next Post
இலங்கை கடலில் ஆய்வு செய்ய கேட்கும் மற்றுமொரு சீனக்கப்பல்!

இலங்கை கடலில் ஆய்வு செய்ய கேட்கும் மற்றுமொரு சீனக்கப்பல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு