அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்காக அமெரிக்க குடியுரிமையை துறக்குமாறு பொதுஜன
கட்சியின் ஸ்தாபகரான பஸில் ராஜபக்ஷவிடம் அக்கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர் என தெரியவருகின்றது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பஸில் ராஜபக்ஷவை களமிறக்கவேண்டும் என்பதே மஹிந்த ராஜபக்ஷவின் எண்ண மாக இருந்தபோதிலும், ‘வியத்மக’ அமைப்பினர் உள்ளிட்ட தரப்புகளின் கோரிக்கையின் பிரகா
ரமே கோட்டாபய ராஜபக்சவை களமிறக்க வேண்டி ஏற்பட்டது எனவும் அந்த உறுப்பினர்கள்
சுட்டிக்காட்டியுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஜனாதிபதி வேட்பாளரை பெயரிட்டுள்ள நிலையில், தமது கட்சி வேட்பாளரை இன்னும் அறிவிக்காமல் இருப்பது கட்சிக்கு அரசியல் ரீதியிலான தாக்கங்களை
ஏற்படுத்தக்கூடும் எனவும் மொட்டு கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
எனவேதான் பஸில் ராஜபக்ஷவை பெயரை அறிவிக்க வேண்டும் எனவும், தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் இரட்டைக் குடியுரிமையை துறப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மூன்றெழுத்து உறுப்பினரே தமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என மொட்டு கட்சி அண்மைக் காலமாக அறிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.