சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கிடையில் இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, கடற்தொழில் அமைச்சு இதுவரை எந்தவொரு அபிவிருத்தி நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கஜேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் வடக்கு கிழக்கில் உள்ள மீனவர்களோடு உரிய முறையில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் கடற்தொழில் அமைச்சானது வடக்கு கிழக்கு மீனவர்களோடு இணைந்து செயற்படுவதில்லை எனவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சபையில் பொய்யான கருத்துக்களை வெளியிட வேண்டாம் எனவும், தமது குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களை முன்வைக்குமாறும், மக்களை குழப்பி, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்று நினைப்பது உங்களுடைய வீண் கனவு எனவும் கஜேந்திரனுக்கு டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
VideoLink👇
https://web.facebook.com/BattinaathamNews/videos/365646162668456\